சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Dec 2015

டி.எல்.எஃப் உள்ளே என்ன நடக்கிறது? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!

டி.எல்.எஃப். ஐ.டி. வளாகத்தில் என்ன நடக்கிறது? - மறைக்கப்படும் மர்மம்! என்ற தலைப்பில் நேற்று விகடன்.காமில் வெளியான செய்தி பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதி கிளப்புவது போல ஏன் இந்த செய்தி’ என்று வாசகர்கள் கமெண்ட் பாக்சிலும் தொலைபேசியிலும் விசாரிக்கிறார்கள்.

டி.எல்.எஃப். ஐ.டி. வளாகம் பற்றி பீதி கிளப்பும் நோக்கத்தில் அந்தச் செய்தி பதியப்படவில்லை. சென்னையை வெள்ளம் துவம்சம் செய்த கடந்த செவ்வாய்கிழமை முதலே டி.எல்.எஃப். வளாகம் குறித்த தகவல்கள் விகடன் செய்தியாளர்களை எட்டியது. அதீத வெள்ளப் பாதிப்பு பல இடங்களை பாதிக்கச் செய்தது போல டி.எல்.எஃப் வளாகத்தையும் பாதித்திருக்கிறது என்ற அளவில் அந்த தகவல்களைக் குறித்து வைத்திருந்தோம். ஆனால், கடந்த திங்கட்கிழமை வரையும் டி.எல்.எஃப் வளாகத்தில் என்ன நடக்கிறது என்ற தகவல் வெளி உலகத்துக்கு தெரியவில்லை. தொடர்ந்து விகடன் அலுவலகத்துக்கும் டி.எல்.எஃப். ஐ.டி. வளாக நிலை பற்றிய விசாரணைகள், புகார்கள் வந்தபடியே இருந்தன. உடனடியாக களத்தில் நேரடியாகச் சென்று விசாரித்தபோதும், உள் நிலவரம் குறித்து எவரும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. அதோடு செய்தியாளர்களையே அதட்டி விரட்ட முனைந்தனர். ஆனாலும், பொறுமையாக எமது நோக்கத்தை விளக்கினோம். அப்போதும் பொறுப்பான பதில் இல்லை. விசாரணை தொடர்புக்கு என அங்கு குறிப்பிடப்பட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தால், எதிர்முனையில் எந்தப் பதிலும் இல்லை. இதுவே ’மறைக்கப்படுகிறதா மர்மம்’ என்ற சந்தேகத்தை உண்டாக்கியது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய டி.எல்.எஃப் தரப்பினர் முன்வரவில்லை.
 
அதனாலேயே அரசாங்கத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முடிவெடுத்தோம். இன்றைய தமிழக சூழலில், அரசாங்க கவனத்துக்கு கொண்டு வந்துவிட்டால் மட்டும் மர்மம் நீங்கிவிடுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதனாலேயே பொதுமக்களிடையே செய்தியை கொண்டு சேர்க்கும் நோக்குடன் அந்தச் செய்தியைப் பதிந்தோம். அரசாங்கம் மற்றும் பொதுமக்கள்... இரு தரப்பினரையும் உஷார்படுத்துவதே, அந்தக் கட்டுரையின் நோக்கம். மற்றபடி பீதி கிளப்பும் நோக்கம் எதுவுமில்லை.

இந்நிலையில், டி.எல்.எஃப் கட்டுரைக்கு சந்திரமோகன் என்ற வாசகர் பின்வரும் கருத்தைப் பதிவு செய்திருந்தார்...

- பேஸ்மெண்ட் முழுகி விட்டது என்பதில் உண்மை இருக்கலாம், ஆனால் முதல் இரண்டாம் தளம் எல்லாம் முழுகி இருக்க வாய்ப்பு இல்லை. தரை தளத்தில் தண்ணீர் சில கட்டடங்களுக்குள் சென்று இருக்கலாம். நான் புதன் காலை (டிசம்பர் 2) சென்ற போது என்ன அனுமதித்தனர் (எனது அலுவலகம் அங்குதான் உள்ளது). ஆனால் மதியம் சென்ற போது உள்ளே விடவில்லை. புதன் காலைதான் பல்வேறு அலுவலகங்களின் ஊழியர்களும் வெளியேறினர். எனக்குத் தெரிந்த வரை, பலரும் செவ்வாயன்று வெளியேற முடியாமலும், அருகில் தங்கி இருந்த ஊழியர்கள் சிலர் அவர்கள் வீட்டில் இருக்க முடியாமல் செவ்வாய் இரவு DLF ல் வந்து தங்கியும் இருந்ததாலும், கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் போனது. மின்சாரம் இல்லாததால் அவர்கள் அனைவரையும் வெளியேறச் சொன்னதாக என் சக ஊழியர் ஒருவர் சொன்னார். புதனன்று நான் பார்த்த வரையில் உயிர்ச் சேதம் இருக்க வாயிப்பில்லை. ஆனால், கார்கள், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. தயவு செய்து உறுதி செய்யப்படாத தகவல்களை எழுத வேண்டாம். Yes, I agree that DLF do not disclose things that create the unwanted questions. At the same time, I myself has many complaints about DLF, including that (1) they just have one entrance / exit fully operational (imagine about stampede during any disasters) though they have two more exits mostly closed or not fully open; (2) they appoint many North Indian securities and we cannot communicate with them easily (I am not against Hindi but they cannot expect me to learn another language to use in my own state); (3) they do not keep drinking water in the food court so that the restaurants can force us to buy bottled water; (4) the traffic and parking is a disaster inside DLF. You will have to go for a scenic tour circling about 6 buildings to enter the parking of the very first building. They give more respect to the cab drivers who block the way and go in the wrong side, but if you just stop your car for a minute to drop someone, the security will shout at you; (5) Shouldn't there be a a clinic considering the number of buildings and number of people working in there?; and lastly (6) they never respond to any compliant.

- திரு. சந்திரமோகன் அவர்களும் அவருக்குத் தெரிந்த வரை உயிர்சேதம் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை என்கிறார். 

இதே கருத்தைதான் நாமும் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், டி.எல்.எஃப்பில் பணிபுரியும் 7 தூத்துக்குடிகாரர்கள் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் அங்கு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புகாரை வாங்கிக் கொள்ள மறுத்து சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவலும் கிடைத்திருக்கிறது. அதோடு டி.எல்.எஃப் வளாகத்திலிருந்து சில அதிர்ச்சி செய்திகள் வருகிறது. அதன் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு பதிவு செய்கிறோம்.

டி.எல்.எஃப்-ல் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதியே இந்த செய்தியை சேகரித்து நாங்கள் பிரசுரித்தோம். இப்போதும் அந் நிறுவனத் தரப்பிலிருந்து நடந்தது குறித்து விளக்கம் அளித்தால், அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். வாசகர்களும் டி.எல்.எஃப்.-ன் இப்போதைய நிலவரம் குறித்த ஊர்ஜிதமான தகவலோ, படங்களோ இருந்தால் news@vikatan.com மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பலாம். விகடனின் செய்திகள் எப்போதும் பொதுமக்களிடம் அச்சத்தையோ, பீதியையோ உண்டாக்காது. அதே சமயம் தேவைப்படும் சமயம் எச்சரிக்கவும் தவறாது. சென்னை வெள்ளப் பாதிப்புகள் மனிதப் பிழையால் விளைந்தவையே... முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தக்க சமயம் எச்சரிக்காதது, இரவு நேரம் அணையின் மதகுகளைத் திறந்தது என மனிதப் பிழைகளில் இருந்து பாடம் கற்க வேண்டிய தருணம் இது. பாடம் கற்க வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல... ஒவ்வொரு தனிமனிதனும்தான்!


No comments:

Post a Comment