சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2015

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார்!

பிரபல தொழிலபதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி (84) சென்னையில் இன்று (2-ம் தேதி) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

செட்டிநாடு குழு நிறுவனங்களின் தலைவராக இருந்து வந்தவர் எம்.ஏ.எம். ராமசாமி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்தார்.


இந்நிலையில், எம்.ஏ.எம்.ராமசாமிக்கு கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகங்கள் செயலிழப்பு உள்பட பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (2-ம் தேதி) மாலை எம்.ஏ.எம். ராமசாமி காலமானார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருவெற்றியூரில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment