சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Dec 2015

ரஹானே இரு இன்னிங்சிலும் சதம் : 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி!

டெல்லியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி,  தென்ஆப்பிரிக்க அணியை 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 334 ரன்கள் குவித்தது. விராட் கோலி 44 ரன்களும், ரஹானே 127 ரன்களும் , அஸ்வின் 54 ரன்களும் எடுத்தனர். 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் எடுத்தது. தென்ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவீந்தர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் ரஹானே சதமடித்து அசத்தினார். விராட் கோலி 88 ரன்கள் குவித்தார். 2வது இன்னிங்சில் இந்திய அணி 267 ரன்கள் எடுத்தது. 

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணியின் விக்கெட்டுகள் மீண்டும் மளமளவென்று சரியத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சுழலில், தென்ஆப்ரிக்க அணி திணறத் தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் தென்ஆப்ரிக்க அணி தரப்பில் டி வில்லியர்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்ரிக்க அணி 143 ரன்களில் அவுட் ஆனது.
இதனால் தென்ஆப்ரிக்க அணி 143 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இறுதியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அத்துடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்றும் இந்திய அணி கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை பெற்ற ரஹானே, தனது விருதை சென்னை மக்களுக்கும் வெள்ள மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் சமர்ப்பித்தார்.

No comments:

Post a Comment