சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Dec 2015

3 ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்றத்தில் முதல் கேள்வி கேட்ட சச்சின் !

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று 3 ஆண்டுகள் கழித்து, நடப்பு கூட்டத் தொடரில்  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது முதல் கேள்வியை எழுப்பினார். 

உலகின் அனைத்து கிரிக்கெட் ஆடுகளத்தில் அதிரடியாக விளையாடி எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், நாடாளுமனறத்தில் தனது முதல் கேள்வியை கேட்பதற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
கடந்த 2012 ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி சச்சின் மாநிலங்களவை எம்.பி.யாக,  காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டார்.அப்போது சச்சினை எம்.பி. ஆக நியமித்து அதன் மூலம், அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாக காங்கிரஸ் மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்கள் வைத்தன. அதேசமயம் நாடாளுமன் றத்தில் சச்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சச்சினின் செயல்பாடு மீது கடும் விமர்சனங்கள்தான்  எழுந்தன. இந்நிலையில்  பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் இன்று  தனது முதல் கேள்வியை கேட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சென்னை, மும்பை, டெல்லி ஆகிய மூன்று நகரங்களில் செயல்படும் புறநகர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக அவை தனிக்கோட்டமாக அறிவிக்கப்படுமா? என்று ரயில்வே அமைச்சரிடம் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை ரயில்வே அமைச்சகம் பதில் அளித்து விட்டது.


No comments:

Post a Comment