சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Nov 2015

யமஹா RX100, RX135


யமஹா என்றாலே அதன் தனித்துவமான 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம்தான் நினைவுக்கு வரும். உடனடி பிக்அப், சுலபமான கையாளுமை, அசராத இன்ஜின் என இதன் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும் ஆர்எக்ஸ் பைக் ரசிகர்கள் இதை விடுவதாக இல்லை. நாடெங்கும் இதற்குத் தனியாக ரசிகர் மன்றங்களே (கிளப்புகளே) இருக்கின்றன. இப்படி யமஹாவின் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற ஆர்எக்ஸ் வரிசை பைக்குகளின் வரலாறு சுவையானது.
1985
100 சிசி பைக்குகள் பிரபலமாகி வந்த காலகட்டம்... யமஹா தனது எந்த பைக்கை
 
இந்த நேரத்தில் களமிறக்கும் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. யமஹாவின் ஆர்டி 350 பைக்கை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய எஸ்கார்ட்ஸ் நிறுவன அதிகாரிகள், ஜப்பான் யமஹா நிறுவன அதிகாரிகளோடு இது பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இந்தியாவில், இந்த் சுஸூகி ஏஎக்ஸ் 100 (2 ஸ்ட்ரோக்) மற்றும் ஹீரோ ஹோண்டா சிடி 100 (4 ஸ்ட்ரோக்) ஆகிய பைக்குகள் விற்பனையாகிக் கொண்டு இருந்தன.
இதில், 2 ஸ்ட்ரோக் பைக்கான இந்த் சுஸூகி, இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றி-ருந்-ததால், இதன் வெற்றிக்கான காரணங்களை யமஹா ஆராய்ந்தது. 'குறைந்த எடை, சிறந்த பிக்அப், நல்ல மைலேஜ், சிக்கல் இல்லாத இன்ஜின், குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவைதான் இந்த் சுஸூகியின் வெற்றிக்குக் காரணம்' என்று எஸ்கார்ட்ஸ§ம், யமஹாவும் முடிவுக்கு வந்தன.
அப்போது, உலக அளவில் விற்பனையாகிக் கொண்டு இருந்த சுஸூகி ஏஎக்ஸ் 100 பைக்குக்குப் போட்டியாக, யமஹாவின் ஆர்எக்ஸ் 100 பைக்கும் விற்பனையாகிக் கொண்டு இருந்தது.
எனவே, எஸ்கார்ட்ஸ் யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ்- 100 பைக்கையே இந்தியாவின் 100 சிசி மார்க்கெட்டில் களம் இறக்குவது என்று முடிவு செய்தது. ஜப்பானிலிருந்து இந்த பைக்கின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து விற்பனை செய்தது. 98 சிசி அளவு கொண்ட இதன் 2 ஸ்ட்ரோக் இன்ஜின், 11 php சக்தியை அளித்தது. 2 ஸ்ட்ரோக் இன்ஜின் என்றாலும், அப்போது புதிய தொழில்நுட்பமாகத் திகழ்ந்த முதல் '7 போர்ட் ஆல் அலுமினியம் அலாய்' இன்ஜின் இது-தான். மேலும், இன்டேக் போர்ட்டில் ரீட் வால்வும், பராமரிப்பு தேவைப்படாத எலெக்ட்ரானிக் இக்னீஷியனும் பொருத்தப்-பட்டு இருந்தன. அப்போது மார்க்கெட்டில் இருந்த 100 சிசி பைக்-குகளைவிட ஆர்எக்ஸ் 100 அதிக php திறனுடன் விளங்கியது. குறைந்த பரா-மரிப்புச் செலவு, நல்ல பிக்அப், எளிதான ஹேண்ட்லிங், போதுமான மைலேஜ் ஆகியவை சிறப்பாக இருந்ததால், ஆர்எக்ஸ் 100 பைக் விரைவாகப் பிரபலமடைய ஆரம்-பித்தது. அதனால், பிரீமியம் செலுத்தி இந்த பைக்கை வாங்கும் நிலைமை உருவானது. அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் விற்பனையாகி வந்த ஆர்எக்ஸ் 100 மாடலில் ஆர்எக்ஸ் 115, 125 என வேரியன்டுகளும் இருந்தன. இதன் உதிரி பாகங்களை இந்திய ஆர்எக்ஸ் 100 பைக்கில் அப்படியே பொருத்த முடியும். இதனால், இளைஞர்கள் தங்களது பைக்கை விருப்பத்துக்கு ஏற்றவாறு ரீ-டிசைன் செய்தனர்.
இந்தச் சமயத்தில் ரேஸ் போட்டிகளிலும் ஆர்எக்ஸ் 100 அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரோடு ரேஸிங், ராலி, மோட்டோ கிராஸ் பந்தயங்கள் என்று எல்லா இடங்களிலும் பட்டையைக் கிளப்பியது. 2 ஸ்ட்ரோக் 100 சிசி மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது ஆர்எக்ஸ் 100. இந்த பைக்கின் வருகையால் யமஹாவின் போட்டியாளர்களான ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்கள், தங்களின் 100 சிசி பைக்குகளை மேம்படுத்தி மறு அறிமுகம் செய்தன. இருப்பினும், ஆர்எக்ஸ் 100-ல் இருந்த பல சாதகமான அம்சங்களால் அதன் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
1996
11 ஆண்டுகளாக பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல், ஸ்டிக்கர் டிசைன்களை மட்டும் மாற்றி மாற்றி மறு அறிமுகம் செய்து விற்பனையில் யமஹா சாதனை படைத்து வந்தாலும்... ஒரு கட்டத்தில் 2 ஸ்ட்ரோக் பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனையும் சரிவை நோக்கிப் போய் கொண்டிருந்தன. அதனால், யமஹாவுக்கு ஆர்.எக்ஸ் 100 பைக்கின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இழந்த பெருமை-யை மீட்க, ஆர்எக்ஸ் 100 பைக்கின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு, ஆர்எக்ஸ்ஜி' என்ற பெயரில், 132 சிசி இன்ஜினுடன் புத்தம் புதிய பைக்கைக் களமிறக்கியது. ஆனால், சில குறைபாடுகள் காரணமாக இது சரியாக விற்பனையாகவில்லை. அதனால், அறிமுகமான ஒரே ஆண்டிலேயே இதன் தயாரிப்பு கைவிடப்பட்டது.
1997
ஆர்எக்ஸ்ஜி-யில் இருந்த குறைபாடுகளைக் களைந்துவிட்டு, ஆர்எக்ஸ் 135 என்ற பெயரில் மீண்டும் ஒரு புத்தம் புது பைக்கை யமஹா அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 135 என்றாலே குறைபாடான பைக்தான் என்று மக்கள் மனதில் பதிவாகிவிட்டதால், இதன் விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அத்துடன், வெளிநாடுகளில் தனது நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்போர்ட்டி மாடல் பைக்கில் சற்றே மாறுதல் செய்து, 'ஆர்எக்ஸ்ஸீ' என்ற பெயரிலும் யமஹா இந்தியாவில் களமிறக்கியது. இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் அமோக வரவேற்பைப் பெற்றது.
2000
சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், யமஹா தனது ஆர்எக்ஸ் 135 பைக் சைலன்சரில் கேட்டலிக் கன்வர்ட்டரைப் பொருத்த... சைலன்ஸர் ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பெற்றது. அதனால், யமஹாவின் தனி அடையாளமாகத் திகழ்ந்த 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தத்தை அது இழந்தது. இந்த சைலன்ஸரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினால், பைக்கின் பர்ஃபாமென்ஸில் ஏற்பட்ட மந்தத்தை ஈடுகட்ட, இன்ஜினில் சில மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக இன்ஜினின் சக்தி 14 php-யாக அதிகமானது. அத்துடன் புதிதாக 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் சேர்க்கப்பட்டு, 'ஆர்எக்ஸ் 135 - 5 ஸ்பீடு' என்ற பெயரில் புது அவதாரமெடுத்தது. ஆனால், இது ஏற்கெனவே இருந்த ஆர்எக்ஸ் 135 மாடலைவிட மிகக் குறைவான மைலேஜ் கொடுத்ததால், பவர் ஃபுல் பைக் வேண்டும் என்று விரும்பியவர்கள் மட்டுமே வாங்கும் பைக்காக இது ஆனது.
2001
தனது ஸ்போர்ட்டி மாடலான ஆர்எக்ஸ்ஸீ-க்குப் புத்துணர்வு கொடுப்பதைப்போல, ஆர்எக்ஸ் 135, 5 ஸ்பீடு பைக்கின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸை, ஆர்எக்ஸ்ஸீ பைக்கில் பொருத்தி, 'ஆர்எக்ஸ்ஸீ 5 ஸ்பீடு' என்ற பெயரில் யமஹா மறு அறிமுகம் செய்தது. இந்த புது பைக்கில் முன் பக்க டிஸ்க் பிரேக், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஆகியவற்றுடன் விற்பனையான பைக், போட்டி நிறுவனங்கள் விற்பனை செய்து வந்த நவீன பைக்குகளுக்குப் சவாலாக உருவெடுத்தது.
2003
'ஆர்எக்ஸ்ஸீ 5 ஸ்பீடு' இன்ஜினின் பவர் அதிக-மாக இருந்தாலும் மைலேஜ் குறைவாக இருந்ததால், விற்பனை சரிந்தது. இதன் காரணமாக, இந்த இன்ஜினில் சிறிது மாற்றங்கள் செய்து, சக்தியைக் குறைத்து, 4 ஸ்பீடு மட்டுமே கொண்ட கியர் பாக்ஸ§--டன் புதிய ஆர்எக்ஸ் 135 பைக்கை யமஹா அறி-முகப்படுத்தியது. இதில் சுவிட்ச் கியர், ஸ்பீடோ மீட்டர், இண்டிகேட்டர், ஹெட் லைட், டெயில் லைட் போன்றவற்றில் பல நவீன மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், கிராஃபிக்ஸ் டிசைன் என்று எதுவும் இல்லாமல் பார்ப்-பதற்கு பழைய ஆர்எக்ஸ் 100-ஐ நினைவுப்படுத்தியது இந்தப் புதிய மாடல்.
2005
வாகனத் தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி, '100 சிசி-க்கு மேலே 2 ஸ்ட்ரோக் இன்ஜின்களைத் தயாரிப்பதில்லை' என்று முடிவு செய்தனர். அதனால், யமஹா தனது ஆர்எக்ஸ் வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
பழைய பைக் மார்க்கெட்
இப்போது 2 ஸ்ட்ரோக் பைக்குகளே அரிதாகிவிட்ட காலத்தில், அபூர்வமாக இருக்கும் ஆர்எக்ஸ் 100, 135, ஆர்டி 350 போன்ற பைக்குகளுக்கு இன்றும்கூட, பழைய பைக் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. இந்த பைக்குகள் எந்த நிலையில் இருந்தாலும் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க இதன் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏன், ரேஸ் போட்டிகளில் ஆர்எக்ஸ் 135 வரிசை பைக்குகள் இன்றைக்கும் அணிவகுத்து நிற்பதே இதன் மங்காத புகழுக்குச் சாட்சி!


No comments:

Post a Comment