சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

விருதுகளைத் திருப்பி அளிக்க மாட்டேன்: கமல்ஹாசன் திட்டவட்டம்!

எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை நான் திருப்பி அளிக்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி விவகாரம், கன்னட எழுத்தாளர் கொலை உள்ளிட்ட  சில  நிகழ்வுகளுக்கு தங்கள் எதிர்ப்பினைக் காட்டும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் தங்களின் விருதுகளைத் திருப்பி அளித்து வருகின்றனர். 

இதுகுறித்து, இன்று (3-ம் தேதி) காலை ஹைதராபாத்தில் நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ''தங்கள் விருதுகளைத் திருப்பி அளிப்பவர்கள், தத்தம் எதிர்ப்பைக் காட்டும் ஒரு குறியீடாகவே அதைச் செய்கின்றனர் என்று நானறிவேன். அத்தகையக் குறியீட்டை நான் அவமதிக்கவில்லை.
நான் வாங்கிய விருதுகளையோ அல்லது வருவாயையோ நான் திருப்பி அளிக்க மாட்டேன். உதாரணமாக, நான், ஒட்டுமொத்தத் திரையுலகத்தோடும் கடுங்கோபத்தில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் வாங்கிய விருதுகளை வேண்டுமானால் நான் திருப்பி அளிக்க முடியுமே தவிர, நான் திரைத்துறையின் வாயிலாகச் சம்பாதித்தப் பணத்தை என்னால் திருப்பித் தர இயலாது. அவ்வருவாயை என் அடுத்தடுத்தப் படைப்புகளில் முதலீடு செய்துவிட்டேன். அவ்வாறன்றி என்னிடம் அதிகமான பணம் இருந்தாலும் நான் திருப்பித்தரமாட்டேன்.

ஒருவருக்குக் கொடுக்கப்படும், 'விருது’ என்பது ஒருவரின் திறமையைப் பாராட்டி, கலையறிவுள்ள நடுவர் குழுமம் அளிப்பதாகும். இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கவிஞர் குல்ஸார் போன்றவர்களால் நான் தூண்டப்பெறுகிறேன். அவரது பெயரைச் சொன்னவுடன் அவரது கவிதைகள் மட்டுமே என் மனதில் ஓடுகிறதே தவிர, அவர் சீக்கியரா, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரா என்பதெல்லாம் என் மனதில் தெரிவதேயில்லை. அதேபோல், இயக்குநர் சிகரத்தைப் பற்றி எண்ணுகையில் அவரது சாதி என் கண்களுக்குத் தெரிவதில்லை.

என் தனிப்பட்டக் கலைப்பயணத்தில் பல்வேறு தரப்பினர் எனக்குத் தவறிழைத்திருக்கின்றனர். அவற்றை நான் தனியாகவே சந்தித்துக் கொள்வேன்.

'ஹே ராம்', 'விஸ்வரூபம்' ஆகிய திரைப்படங்கள் வெளிவரும்போது பா.ஜ.க ஆட்சியில் இல்லை. பா.ஜ.க., காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்., முஸ்லீம் லீக் என எல்லாக் குழுவினரும் ஒன்று போலவே, சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் என்னைச் சகிப்புத்தன்மையுடன் என் படங்களைக் கத்தரித்துச் சித்தரிக்கச் சொல்கிறார்கள்'' என்றார்.

No comments:

Post a Comment