சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

சச்சினை விமர்சித்தது ஏன்? கபில்தேவ் விளக்கம்!

தான் நினைத்தது போல சச்சின் கருணையற்ற  பேட்ஸ்மேனாக வராத வருத்தத்தில்தான், சச்சின் குறித்து விமர்சித்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் விளக்கமளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரால் சதத்தை  இரட்டைச் சதம், முச்சதமாக மாற்ற முடியவில்லை. மும்பை ரக  கிரிக்கெட்டுக்குள் அவரது ஆட்டம் அடங்கி விட்டதாக கபில்தேவ் கூறியிருந்தார். அதோடு சேவாக் போல ஆடியிருக்க வேண்டுமென்று சச்சினுக்கு ஆலோசனை வழங்கியிருப்பேன் என்றும் கபில்தேவ் கூறியிருந்தார். சச்சினை கபில் விமர்சித்ததால்,  மும்பையை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில் தற்போது சச்சின் குறித்த விமர்சனத்துக்கு  கபில்தேவ் விளக்கமளித்துள்ளார். ''சச்சின் விலை மதிப்பற்ற வீரர். ரிச்சர்ட்சை விட திறமை வாய்ந்தவர். கருணையே காட்டக் கூடாத ஒரு பேட்ஸ்மேனாக அவர் இருந்திருக்க வேண்டும். 100 சதமடித்த வீரர் ஒரு தேக்க நிலையை அடைந்தை கண்டுதான் நான் அவ்வாறு கூறினேன். சச்சின் தனது திறமைக்கேற்ப சாதனைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. 

சச்சின் காலத்தையும் மிஞ்சி நிற்கும் வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் நான் எதிர்பார்த்த மாதிரி பேட்ஸ்மேனாக  வரவில்லை என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் இருக்கிறது.  1998- ம் ஆண்டு ஷார்ஜாவில் வைத்து,  ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சச்சின் விளாசியது இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. அத்தகைய சச்சின்தான் எனக்கு வேண்டும்.

மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் சச்சின் முன் சாதாரணமாக தோன்றுவார்கள். நினைத்த நேரத்தில் அவரால் பந்தை பவுண்டரிக்கு விளாச முடியும். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தின் போது கூட அத்தகைய ஆதிக்கத்தன்மையை சச்சினிடம் என்னால் காண முடியவில்லை. 

மும்பை கிரிக்கெட்டர்களின் திறமையை நான் சந்தேகிக்கவில்லை. ரஞ்சி கோப்பையில் 40 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர். அதுவும் 15 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள். மும்பை வீரர்களை பார்த்துதான் மற்றவர்கள் கிரிக்கெட்டை கற்றுகொள்வார்கள்.  இது ஒரு அபார சாதனையே. ஆனால் இப்போது ஆட்ட நுணுக்கங்கள் மாறிவிட்டன.  இப்போதெல்லாம் கருணையற்ற பேட்ஸ்மேன்களைதான் எல்லோரும் விரும்புகிறார்கள். 

இளைய சகோதரர் ஒருவரை பற்றி மூத்த சகோதரர் என்ற முறையில் கருத்து தெரிவித்தேன்" என்றார்.

No comments:

Post a Comment