சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

தங்களுக்காக போரிட்டு மடிந்த இந்துவுக்கு விழா எடுக்கும் இஸ்லாமியர்கள்!

நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எழுத்தாளர்கள் முதல் நடிகர் ஷாருக்கான் வரை வருந்திக் கொண்டிருக்க, நாட்டில் ஆங்காங்கே மத நல்லிணத்துக்கு உதாரணமான சம்பவங்கள் சப்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக கேரளாவில் உள்ள ஒரு மசூதியில்,  இந்து ஒருவருக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஒரு வரலாற்று சம்பவம் காரணமாக அமைந்துள்ளது.  கடந்த 290 ஆண்டுகளுக்கு முன்,  கோழிக்கோடு பகுதியை ஆண்டு வந்த அரசர் ஒருவருக்கும்,  மலப்புரம் பகுதியில் வசித்து வந்த இஸ்லாமிய  மக்களுக்கும் வரிவசூல் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. 

உடனே அரசர், வராக்கல் பாரா நம்பி என்பவரின் கீழ், ஒரு பெரும் படையை அனுப்பி இஸ்லாமிய மக்களை துன்புறுத்தியுள்ளார். அரச படையை எதிர்த்து அலி மராக்கையர் என்பவர் தலைமையில்  இஸ்லாமிய மக்கள் போரிட்டுள்ளனர்.  

ஆனால்  போரில் வென்ற மன்னர் படையினர்,  அங்கிருந்த வாலியங்காடி ஜும்மா மசூதியையும் தீக்கிரையாக்கி விட்டனர். அதோடு மலப்புரத்தில் இருந்து இருந்து இஸ்லாமிய மக்களையும் துரத்தியுள்ளனர். இந்த போரில் 43 இஸ்லாமியர்களுடன்  அதே பகுதியை சேர்ந்த கெனலு என்ற இந்துவும் போரிட்டு   பலியானார். தங்களுடன் போரிட்டு மடிந்த கெனலுவின் உடலை இதே மசூதிக்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமிய மக்கள் எரித்தனர். பின்னர் மலப்புரத்தை விட்டும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் வெளியேறி விட்டனர். 

தொடர்ந்து என்ன  காரணத்தினாலோ மனம் திருந்திய வராக்கல் பாரா நம்பி, தீக்கிரையான மசூதியை மீண்டும் புணரமைத்து கட்டி கொடுத்தார். ஏராளமான இஸ்லாமிய மக்களையும் மீண்டும் மலப்புரத்திற்கு வந்து குடியேற ஏற்பாடு செய்தார். அப்படிதான் கேரளாவில்  மலப்புரம், இஸ்லாமிய  மக்கள் நிறைந்த மாவட்டமாக மாறியது. அப்போதிருந்து மலப்புரம் நகரின் மத்தியில் உள்ள இந்த வாலியங்காடி ஜும்மா மசூதி , முக்கிய மத அடையாளமாக விளங்குகிறது. 

அதோடு தங்களுக்காக போராடி, போரில் உயிரிழந்த இந்து நண்பருக்கு நன்றி செலுத்தும்விதமான, சபான் மாதத்தின் போது, கெனலுவுக்காக இந்த மசூதியில் விழா எடுக்கப்படுகிறது. இந்த சமயத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் நேர்ச்சை வழங்குவதும் உண்டு. 
இந்த நிகழ்வின் போது, கெனலுவின் பரம்பரையினர் மசூதிக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில் கெனலுவின் நினைவாக,  சிறப்பு விருந்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மதம், இனம் பாராமல் இந்த விழாவில் மக்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. 
 

No comments:

Post a Comment