சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Nov 2015

என்னை சீண்டினால் புலியாக மாறுவேன்: குஷ்பு ஆவேசம்!

"தில் இருந்தால் நேரடியாக பேச வேண்டும். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்" என ஹசீனா சையத்துக்கு எதிராய் குஷ்பு ஆவேசமாய் பேசினார்.

நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, "ப.சிதம்பரம், தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை" என கருத்து தெரிவித்திருந்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
''காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது” என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் இன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இதற்கு பதிலளித்தார் குஷ்பு.
''தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை. நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.

ஆனால், ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன்” என்றார் ஆவேசமாக.

மேலும், ''கடந்த ஓராண்டில் தமிழக காங்கிரஸ் ஓஹோ என வளர்ந்து வருகிறது. நான் 30 ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறேன். எனக்கு சத்யமூர்த்தி பவன் எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. இந்த ஒராண்டில்தான் சத்யமுர்த்தி பவன் செயல்படுகிறது. தொண்டர்களும் வந்து செல்கிறார்கள்” என்றார்.


No comments:

Post a Comment