சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

சீன வெடிகள்: சுதேசி கொள்கைக்கு வைக்கும் வேட்டு!

சிவகாசி, பாரம்பரியமாக பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்றது. ஆனால்  சுதேசி கொள்கைக்கு எதிராக மத்திய பாரதிய ஜனதா அரசு, சிவகாசியை அழித்து,  விதேசி சீனாவை  வாழவைக்க துடிப்பது என்பது நமது சுதேசி கொள்கைக்கே வேட்டு வைக்கும் செயலாகும். 

சீன பட்டாசுகள் இறக்குமதியால், நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்கும்  நிலையை மத்திய மோடி அரசு உருவாக்குகிறது. 

நன்றாக நடைபெற்றுவரும் மற்றும் அரசுக்கு வருவாயும், அதிக அளவு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரும் தொழிலை,  தெரிந்தே அழிப்பது என்பது தேதி குறிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு ஒப்பானதாகும். 

சுதேசி விழிப்புணர்வு தலைவர் என்று பெருமையோடு பறைசாற்றிகொள்ளும்  மோடிக்கு மிக  நெருக்கமான சென்னையை சார்ந்த, ஆடிட்டர் ஒருவர் இது குறித்து மோடியிடம் வாதிடாதது, தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர்களின் நலனுக்கும், தான் சார்ந்த சுதேசி கொள்கைக்கும்  செய்யும் துரோகமாகும். 

இரண்டாயிரம் கண்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டது என்பது மத்திய அரசு,  தொழிலாளர்களை வெடிவைத்து தகர்ப்பதற்கு ஒப்பாகும். சீன பட்டாசுக்கள், நமது துறை முகங்கள் வழியே வருவதை தடுக்க தவறிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சிவகாசி  தொழிலாளர்களுக்கு வாழ்நாள் துரோகம் இழைத்துவிட்டார். சீனப் பட்டாசைப் பயன்படுத்தும்போது அதனை உபயோகிக்கும் முறை தெரியாமல் பெரும் ஆபத்துக்கள்  ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.  
அப்படி ஆபத்து ஏற்பட்டால் இழப்புகளுக்கு மோடியும், மத்திய அரசுமே முழுபொறுப்பேற்க வேண்டும். 

இந்த ஆண்டு,  சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதி அளவு வீழ்ச்சி ஏற்பட்டதற்கும், பாரம்பரிய பட்டாசு தொழில் நலிவடைந்ததற்கும்  மத்திய அரசு எதிர்காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோ ஷிமா, நாகஷாகி நகரங்களை அணுகுண்டுகள் வீசி அமெரிக்கா அழித்தது போல, சிவகாசியை  சீன பட்டாசு என்ற அணுகுண்டால் மத்திய அரசு அழிக்கும் வேலையை செய்கிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பது போல சிவகாசி வெடியை சீன வெடியால் அழிக்கிறார்களோ என்னவோ?No comments:

Post a Comment