சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Nov 2015

சானியா - மார்ட்டினா சாதித்த கதை!

சினிமாவிலும் சரி, விளையாட்டிலும் சரி,  புகழின் உச்சியில் இருந்து இறங்கிய பின்னர்  'ரீ என்ட்ரி' எல்லோருக்கும் சக்சஸ் ஆவதில்லை. அதிலும் பெண்களாய் இருந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசம். திறமையால் வெற்றி கிடைத்தாலும்  'அவளுக்கு அதிர்ஷ்டம்ப்பா' என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார்கள்.
திருமணம்,  அவதூறு போன்ற மனத்தடையையும், காயங்களால்  ஏற்பட்ட உடற் ரீதியான தடையையும்  தாண்டி  2-வது இன்னிங்ஸில்,  இரண்டு பெண்கள் கைகோத்து  உச்சம்  தொட்டிருக்கின்றனர். ஒருவர் சானியா மிர்சா, இன்னொருவர் மார்ட்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ்  மங்கை. பெண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்பது மாத காலத்தில் ஒன்பது பட்டங்களை வென்று,  டென்னிஸ் உலகையே இப்போது திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது இந்த ஜோடி. இதில்  யு.எஸ் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களும் அடக்கம். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக டென்னிசில் கோலோச்சும் சுவிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ், டென்னிஸ் உலகத்தில் உச்சம் தொட்டு, பின்னர் காயத்தால் முழுக்கு போட்டவர்.  கடந்த 2007-ம் ஆண்டில்தான்  மீண்டும் ரீ என்ட்ரியாகி தற்போது, சானியாவுடன் சேர்ந்து கலக்க ஆரம்பித்திருக்கிறார் மார்ட்டினா.

ஒட்டு மொத்த இந்தியாவுமே  கிரிக்கெட் என்ற போதையில் மூழ்கி கிடக்கையில், டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா சாதித்தது சாதாரண விஷயமல்ல. சானியாவை சுற்றி  சர்ச்சைகளும்  இல்லாமல் இல்லை. "சானியா  குட்டைப் பாவாடை அணிகிறார்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகைப் மாலிக்கை சானியா திருமணம் செய்து கொண்டார்" என்று அவர் மீது ஏதாவது குறையை சொல்லிக் கொண்டுதான் இருந்தனர். அப்போது, சானியா,  "என் தாய்நாட்டுக்காக நான் டென்னிஸ் விளையாடுவேன். எனது கணவர் அவரது தாய்நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவார்!"  என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
திருமணத்துக்கு  பின்னர் மீண்டும் ரீ என்ட்ரியில் இறங்கியுள்ள சானியா, ஒற்றையர் பிரிவில் இருந்து  விலகி, பெண்கள் இரட்டையர்  பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும்  பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது தனது  கேரியரின் உச்சத்தில் இருக்கும் சானியா, இந்த ஆண்டின் கடந்த பத்து மாதங்களில் பத்து பட்டங்களை வென்றுள்ளார். கடந்த மார்ச் மாதம்தான் மார்டினா - சானியா ஜோடி இணைந்தது. அனுபவமும், துடிப்பும், வேகமும், சமயோசிதமும் ஒரு சேரக் கலந்த இந்த இணை,  கடைசியாக விளையாடிய  22  போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. 

"சானியாவை எதிர்த்து நான் விளையாடியிருக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் சானியா என்னிடம் வந்து,  'நாம் ஏன் இணைந்து விளையாடக் கூடாது?' எனக் கேட்டார்.  எனக்கு சானியாவுடன் இணைந்து விளையாடுவது சரி என பட்டது. ஃபேஸ்லைனில் சானியா கில்லி. விம்பிள்டன் போட்டியில் சானியா செம ஃபார்மில் இருப்பார் என நான் கணித்திருந்தேன், அதே போல கலக்கிவிட்டார் . முக்கியமான பெரிய போட்டிகளில் சானியா சிறப்பாக விளையாடுகிறார். அது இந்தியர்களுக்கே உரிய தனித்துவம் என்று நினைக்கிறேன்" என சானியா புகழ் பாடுகிறார் மார்ட்டினா. 

மார்ட்டினா குறித்து சானியா என்ன சொல்கிறார் ?

"என்னால்  டென்னிஸ் கோர்ட்டில் முன்களத்தில் சிறப்பாக செயல்பட முடியும்.  கால்களை வேகமாக நகர்த்துவதில் தனித்துவமிக்க மார்டினா, கோர்ட்டில்  பின்களத்தில் அபாரமாக விளையாடுவார். ஆக  நாங்கள் இணைந்தால் வெற்றி பெறமுடியும் என நினைத்தேன். சிலர் பயிற்சி போட்டிகளில் வெளுத்துக்கட்டுவார்கள், ஆனால் பெரிய தொடர்களில் சொதப்புவார்கள். நாங்கள் அப்படியே நேர்மாறாக இருக்கிறோம். பயிற்சியில் சொதப்புவோம், போட்டியில் கலக்குவோம்.  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் களத்திலும், களத்துக்கு வெளியேவும் நம்புகிறோம். களத்தில் எங்கள் இருவரில் யார் தடுமாறினாலும் எங்களுக்குள்  உடனடியாக உதவிக்கொள்வோம். அதுவே எங்கள் வெற்றிக்கான  ரகசியமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். நானும் மார்டினாவும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்ற ஸ்டேட்டஸில் இருந்து திக் ஃபிரெண்ட்ஸ் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்!” என  மார்டினாவுக்கு லைக்ஸ் தட்டுகிறார்  சானியா. 
 
ஆக சூப்பர் ஜோடிதான்!
சானியா- மார்டினா ஜோடி இந்த ஆண்டு வென்ற டைட்டில்கள்  :-
1. இந்தியன் வெல்ஸ் மாஸ்டர் 
2. மியாமி ஓபன் 
3. பேமிலி சர்க்கிள் கோப்பை 
4. விம்பிள்டன் 
5. யு.எஸ்.ஓபன் 
6. குவான்சுவோ ஓபன் 
7. வுஹான் ஓபன் 
8. சீன ஓபன் 
9.  பெண்களுக்காண டென்னஸ் தொடர் (WTA  champion )

No comments:

Post a Comment