சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Nov 2015

டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஜெயித்தே தீரும்!- தெறிக்க விடும் 9 காரணங்கள்

ந்தியா, தென்னாபிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை மோசமாக இழந்தது. இந்நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாபிரிக்காவை 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர் கொள்ள உள்ளது. தோல்விகளால் சோர்ந்திருந்தாலும் இதில் இந்திய அணி ஜெயிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எப்படி...?
1. அஸ்வின் அஸ்திரம்!

முதல் போட்டியில் 4.4 ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறிய அஸ்வின், அணிக்கு திரும்பி இருப்பது தலைவலி என்று தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளெஸிஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் இந்திய பயணத்தில் அந்த அணி,  டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அஸ்வினிடம் திணறியது. இந்திய ஆடுகளங்கள், 4வது நாளுக்குப் பிறகு ஸ்பின்னர்களுக்கு மட்டுமே கைகொடுக்கும் என்பது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த தொடரை இந்தியா வெல்ல அஸ்வின்தான் பிரம்மாஸ்திரம்!

2. அக்ரஸிவ் டீம் இந்தியா!

டி20, ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணிக்கும், டெஸ்ட் தொடரில் ஆடப்போகும் இந்திய அணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மனநிலை, ஆட்டத்திறன் எல்லாமே அக்ரஸிவாக இருந்ததற்கு, கடைசி இலங்கை தொடர் ஒரு சாட்சி. இலங்கையில், இந்தியா போராடியெல்லாம் வெல்லவில்லை. வெற்றி நிர்ணயிக்கப்பட்ட போட்டியாகவே அனைத்து போட்டிகளையும் வென்றது. இந்தியாவின் அக்ரஸிவ் ஆட்டம், சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கம் என பல பாஸிட்டிவ் விஷயங்கள் இந்தியாவுக்கு உள்ளன.
3.முதல் தொடர் முதல் வெற்றி!

கேப்டன் தோனி ஓய்வு பெற்ற பிறகு, சொந்த மண்ணில் இந்தியா ஆடும் முதல் தொடர் இதுதான்! டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோலி, கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறாரா இல்லையா என்பதை இந்த தொடர்தான் முடிவு செய்யப்போகிறது. பங்களாதேஷில் மழையால் டிரா, இலங்கையில் 2-1 என்ற வெற்றிக்கு பின், சொந்த மண்ணில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோலி. அதனால் அதிசய மாற்றங்களை உண்டாக்க ஏகமாக மெனக்கெடுவார்.  

4. கோலி மிக்ஸ்!

ஒருநாள் போட்டிகளில்தான் சக்சஸ் ஃபார்முலாவை மிஸ் பண்ணிவிட்டுத் திணறுகிறது இந்திய அணி. ஆனால், இந்திய டெஸ்ட் அணியில் அந்த பிரச்னை இல்லை. காரணம் விஜய், தவான், புஜாரா/ராகுல் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், கோலி, ரோஹித், ரஹானே, ஜடேஜா/அக்சர், சஹா என பலமான பேட்டிங் வரிசையும், அஸ்வின், மிஸ்ரா, இஷாந்த், உமேஷ் என பெளலிங் வரிசையும் வலிமையாக உள்ளது. இதனால், கோலியின் மிக்ஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்பதில் ஆச்சர்யமில்லை.

5. நிலையில்லாத ஐந்தாவது இடம்!

பழைய டெஸ்ட் அணியில்,  வி.வி.எஸ். லெட்சுமணனுக்கு பிறகு ஐந்தாவது இடத்தில் யாருமே கச்சிதமாகப் பொருந்தவில்லை. அவரது ஓய்வுக்குப் பிறகு யுவராஜ், ரெய்னா, ரோஹித், ரஹானே என பலரை சோதித்துப் பார்த்தார்கள். ஆனால், இன்னும் அந்த இடத்துக்கு ஏற்ற சரியான நபரை இந்தியா அடையாளம் காணவில்லை. இந்த இடம்தான் 5வது நாள் இலக்கை சேஸ் செய்யும் போது கைகொடுக்கும்!

6. ஆடுகளம்!

தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியதால் இந்திய மைதானங்கள் பழக்கமானவை என்றாலும், அது அனைத்துமே ஒருதின மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே கைகொடுக்கும். ஆனால், ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு கைகொடுக்காது. இந்திய ஆடுகளங்கள் ஐந்து நாட்களும் வேறு மாதிரியான நிலையில், ஸ்பின்னர்களுக்கு மட்டுமே கைகொடுக்கும். அப்படி பார்க்கும் போது தென்னாபிரிக்காவின் சுழற்பந்து வீச்சு தாஹிரை மட்டுமே நம்பியுள்ளது. அவர் சொதப்பினால் தென்னாபிரிக்காவின் நிலை அவ்வளவுதான். இந்தியாவுக்கு அந்த பிரச்னை இல்லை. அஸ்வின், மிஸ்ரா, ரஞ்சியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு திரும்பி இருக்கும் ஜடேஜா என பெரும்படையே உள்ளது.

7. பலம்தான் பலவீனம்!

இந்திய அணியை பொறுத்தமட்டில் அதன் பலம்தான் பலவீனமுமே! இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பான பேட்டிங், பீல்டிங், பெளலிங் என கலக்கியுள்ளது. ஆனால், இலங்கை அணியை இந்தியா எதிர் கொண்டபோது, அந்த அணி அவ்வளவு பலம் வாய்ந்த அணியாக இல்லை. சங்ககாராவின் ஓய்வும் எமோஷனலாக அந்த அணிக்கு பலவீனமாக இருந்தது. அதனால் கோலி அண்ட் கோவின் ரியல் டெஸ்ட்,  இந்த தொடர்தான்.
8. முதல் வெற்றிக்கு போராடும் தென்னாபிரிக்கா!

தென்னாப்பிரிக்க அணி இதுவரை இந்தியாவில் ஒரு தொடரைக் கூட வென்றது கிடையாது. 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் 1-1 என ட்ரா மட்டுமே செய்துள்ளது, ஆம்லா, டிவில்லியர்ஸ், டூப்ளெஸிஸ், ஸ்டெயின் என மிரட்டும் தென்னாபிரிக்க அணியும் தனது முதல் தொடர் வெற்றிக்காக போராடும். அதனால் ஆம்லா, டிவில்லியர்ஸ் மீது கோலி அண்டு கோ கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

9. தொடர் வொயிட் வாஷ் கூடாது!

தொடர் வொயிட் வாஷ் என்ற விஷயத்தை தவிர்க்க, இந்தியா போராடியே தீர வேண்டும். டி20, ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்தியா, இந்த சுற்றுப்பயணத்தில் 0-2 என்று பின் தங்கியுள்ளது. டெஸ்ட் தொடரையும் இழந்தால் 0-3 என்று வொயிட்வாஷ் ஆகும் அபாயம் உள்ளது.
தோல்விக்காக தோனியை குறைகூறுபவர்கள், இதில் தோற்றால் மொத்த அணியையும் குறைகூறும் நிலைக்கு செல்வார்கள் என்பதால் இந்தியா கண்டிப்பாக இந்த தொடரை வெல்ல வேண்டும்.

கோலி அண்ட் கோ,  டிராவை நோக்கி ஆட்டத்தை கொண்டு செல்லாது என்பது மட்டும் உறுதி. இந்தியாவின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் சொல்லி அடித்தால் இந்தியா, தீபாவளி பட்டாசை தெறிக்கவிடும் என்பதில் சந்தேகமே இல்லை..!


No comments:

Post a Comment