சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Nov 2015

கோலியை நமக்குப் பிடிக்க இந்த 5 விஷயங்கள்தான் காரணமா?

நவம்பர் 5... இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் 27வது பிறந்த நாள். கோலியை ஏன் நமக்குப் பிடிக்கும். இந்த 5 காரணங்களில் அதை அடக்கிவிடலாமா? 

1) மிஸ்டர் ரன் மிஷின்!


கோலி 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமாகிய போட்டியில் ஆரம்பித்து இன்று வரை 10,641 ரன்களை குவித்து இந்தியாவின் சக்ஸஸ் ஃபுல் ரன்மெஷினாக உருவாகியுள்ளார். இந்திய அணிக்காக 34 சதங்களை அடித்து ரன் மெஷின் மட்டுமல்ல ரன் ராக்கெட்டாக திகழ்கிறார்.

2) மிஸ்டர் ஸ்லெட்ஜிங்!

முன்பெல்லாம் ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பந்துவீசி விட்டு முறைப்பதும், சிக்ஸ் அடித்துவிட்டு நக்கல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே கெத்தாக வசைபாடி வீரர்களை திரும்ப ஆக்ரோஷமாக முறைத்து, ரசிகர்களின் கூச்சலை ஒற்றை சைகையால் அடக்கி என அதகளப்படுத்தினார் கேப்டன் கோலி.

3) மிஸ்டர் எமோஷனல்!

’மெல்பெர்ன் டெஸ்ட்டோடு தோனி திடீரென தனது ஓய்வை அறிவித்த போது நான் உடைந்தே போய்விட்டேன்’ என்று கூறிய போதும், சங்ககாரா ஓய்வு பெற்றபோது ஆடுகளத்தில் கைகுலுக்கி விடை கொடுத்தது மட்டுமின்றி, இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட டி-ஷர்ட்டையும் வழங்கி எமோஷனல் நபர் என்று சிக்கியது கோலியின் லைட்டர் வெர்ஷன்.

4) மிஸ்டர் ரொமான்டிக்!


இந்திய அணியின் நட்சத்திர வீரர், பிராண்டுகள் விரும்பும் விளையாட்டு வீரர், ஸ்மார்ட் அழகன் எனப் பல தகுதிகள் இருந்தாலும் பல கிசுகிசுக்களில் சிக்கவில்லை கோலி. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா சர்மாவையே தனது கேர்ள் ஃப்ரெண்டாக அறிவித்துவிட்டு, சின்சியர் காதலனாக வலம் வருகிறார் கோலி. தன் ஆட்டத்திறனோடு தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிடும் போதெல்லாம், 'என் பெர்சனல் வேறு... கிரிக்கெட் வேறு’ என பேட்டிங் மூலம் பதில் சொன்ன மிஸ்டர் ஹாண்ட்ஸம்!
5) மிஸ்டர் ட்விட்டர்!

இந்திய அளவில் ட்விட்டர் கில்லி கோலி தான். இந்தியாவில் ட்விட்டரில் அதிக நபர்கள் பின்தொடரும் விளையாட்டு வீரர் கோலிதான். 8.45 மில்லியன் ஃபாலோயர்களுடன் உள்ள கோலிக்கு பின்னால்தான் கிரிக்கெட் கடவுள் சச்சின், மிஸ்டர் கூல் தோனி அனைவருமே! அவ்வப்போது டப்ஸ்மேஷ், செல்ஃபி வீடியோ என ரசிகர்களை குதூகலப்படுத்துவது கோலியின் ஹாப்பி ஹாபி!


No comments:

Post a Comment