சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sep 2015

அழகிரி ரிட்டன்ஸ்...!

லைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாலும் அடக்கி வாசித்து அமைதி காத்த அழகிரி,  மீண்டும் ஆதரவாளர்கள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தி.மு.க.வினரின் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இந்நிலையில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் சூழலில், மீண்டும் தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருப்பதால் அவருடைய ஆதரவாளர்கள்  உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றனர்.

அழகிரி எங்கு சென்றாலும், அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு பிரமாண்டமாய், ஆர்ப்பாட்டமாய்  அந்த ஏரியாவே அதகளப்படும் அளவுக்கு வரவேற்பு தருவார்கள். சில தினங்களுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த  கல்யாணம் ஒன்றில் கலந்து கொள்ள, தன் மனைவி சகிதமாக வந்தார் அழகிரி. அவருடைய ஆதரவாளர்கள் அழகிரியும், அவர் மனைவி காந்தி அழகிரியும் புன்னகையுடன் இருக்கும் பிரமாண்ட போஸ்டரை ஒட்டி வரவேற்பு அளித்தார்கள். திடீரென அழகிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருப்பது, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் என பரபரப்பு கிளம்பியுள்ளது அரசியல் மட்டத்தில்.

இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.
''ஒரு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்தார் அழகிரி. அப்போது கருணாநிதி அவரை பாராட்டி தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார். அதன் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில், அழகிரி மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் ஆனார். பிறகு அழகிரியின் கோட்டையில் ஸ்டாலின் நுழைந்ததால் கடும் கோபம் அடைந்தார். அழகிரி ஆதரவாளர்கள் பலர் ஸ்டாலின் வசம் சென்றனர். இதனை தன் அப்பாவிடம் பலமுறை சொல்லியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் தலைமையுடன் கோபம் கொண்டு, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். தி.மு.க.வின் ஒரே தலைவர் கருணாநிதிதான் என ஸ்டாலினுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓரம்கட்டி வைக்கப்பட்டார்.

இதனால் கடும் கோபம் அடைந்த அழகிரி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பல்வேறு ஊர்களில் காதணி, திருமணம், பெயர் சூட்டும் விழா என நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அதில் கலந்து கொண்டு தி.மு.க.வுக்கு எதிராக பேசினார். அந்த தேர்தலில் தி.மு.க.வும் படுதோல்வி அடைய, அழகிரி மீது தலைமைக்கு கோபம் அதிகமானது.

இந்த நிலையில் மீண்டும் கட்சியில் தனக்கு முக்கியதுவம் கிடைக்கும் என அமைதி காத்தார். இன்னும் தலைமையுடன் சுமூக உறவு ஏற்படாத நிலையில், தன் பலத்தை நிரூபிக்க தற்போது மீண்டும் தனது ஆதரவாளர்களது நிகழ்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
கும்பகோணத்தில் திருமணம் மற்றும் படத்திறப்பு, திருவாரூரில் படத்திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு ஒட்டப்பட்ட போஸ்டரில் தி.மு.க. சின்னம், கருணாநிதி படம் போடாமல் போஸ்டர் அடித்தனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிகழ்சிகளில் தி.மு.க.வினர் பலரும் கலந்து கொள்ள,  அவர் உற்சாகத்தில் உள்ளார். அவர் நிகழ்ச்சிகளில் மீண்டும் கலந்து கொள்ள ஆரம்பித்திருப்பது வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்துதான்'' என ஆரூடம் சொல்கிறார்கள்.

அழகிரி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.  ''தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதி காக்கிறார் அண்ணன். தமிழகம் முழுக்க அண்ணனுக்குனு ஒரு கூட்டம் இருக்கு. அவரோட உறவினர்கள் திருமணம், படத்திறப்பு நிகழ்சிகளில் கலந்து கொண்டார். மற்றபடி சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எல்லாம் வரவில்லை. தலைவர் கண் அசைத்தால் கட்சி பணிகளை சிறப்பாக செய்ய காத்திருக்கிறார்'' என்கின்றனர் உற்சாகமாய்.

முத்து படத்தில் வரும்  "என்னமோ திட்டம் இருக்கு" பாடல்தான்  நமக்கு நினைவில் வந்தது..


No comments:

Post a Comment