சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sep 2015

ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு!

இனிமேல் யாரோ வடிவமைத்த வீடியோக்களை உங்கள் ப்ரொபைலில் பதிவேற்றி லைக்குகளும் ஷேர்களும் அள்ளுவது சுலபமாக இருக்காது. ஆம்! பலதரப்பட்ட மக்கள் பேஸ்புக்கில் நடக்கும் வீடியோ பைரசியைப்பற்றி முன் வைத்த விமர்சனங்களை அடுத்து ’video-matching tool'ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது ஃபேஸ்புக். 

இந்த கருவியின் மூலம் வீடியோவை வடிமைத்தவர்கள் தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி ரீ-போஸ்ட் செய்துள்ளார்களா என கண்காணிக்க முடியும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிடலாம்.கடந்த ஜூன் மாதம் ஆகில்வி எனும் விளம்பர நிறுவனம் நடத்திய ஆய்வு பேஸ்புக்கில் புகழ்பெற்ற வீடியோக்களில் 73% பல சைட்டுகளிலிருந்து திருடப்பட்டவையே என்கிறது. வீடியோ வணிகத்தை மேம்படுத்த திட்டமிட்ட ஃபேஸ்புக் கடந்த ஜூலை மாதம் முதல்முறையாக கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு தன்னுடைய விளம்பர லாபத்தை பங்கிட்டு தர முடிவெடுத்தது. அப்போது எழுந்த வீடியோ பைரசி பற்றிய விவாதங்களே இந்த கருவியை வடிமைப்பதற்கான மூல காரணம் என்கிறது ஃபேஸ்புக்.

தற்போது யூ-ட்யூபில் ஒரு வீடியோ உரியவருடைய அனுமதியின்றி பதிவேற்றப்பட்டால் கூகுள் தனிச்சையாகவே அதை கண்டுபிடித்து நீக்கி அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கையும்  செய்து விடும். ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் கருவியோ பதிவேற்றப்பட்ட வீடியோவின் உரிமையாளர் அதனை கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு மட்டும் வழங்கி சோதித்து வருகிறது ஃபேஸ்புக்.No comments:

Post a Comment