சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sept 2015

சென்னையில் வின்டேஜ் ஜாலி ராலி!

சென்னை டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் அதிகாலையில் இருந்தே அணிவகிக்கத் துவங்கின அந்தக் கால கார்கள். ' மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங்க் கிளப்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த ராலிக்கு, ஆண்டுதோறும் அபூர்வ, ஆச்சரிய கார்கள் கலந்துகொண்டு அப்ளாஸ்களை அள்ளும்.  

பழைமையை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது தீபாவளிக் கொண்டாட்டம் போல.


இந்த ஆண்டு கலந்துகொண்ட 124 கார்களில், 9 சூப்பர் கார்களும், 34 இரு சக்கர வாகனங்களும் பங்கேற்றன. டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த இந்த விண்டேஜ் வாகன ராலியை  கொரியா தூதரக அதிகாரி கியுன்சூ கிம் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மைதானத்திலிருந்து கம்பீரமாக கிளம்பி சென்னை சாலைகளில் வலம் வந்த இந்த கார்கள் மீண்டும் பள்ளி மைதானத்துக்கு அதே கம்பீரத்துடன் திரும்பின. பழைய மாடல் கார்களை மக்கள் ஆர்வத்துடன் ரசித்ததுடன் மொபைல் போனில் செல்ஃபிகளால் சுட்டுத் தள்ளினர்.

கார் பராமரிப்பு, பழமை மாறாமல் பேணிவரும் செயல் என வெவ்வேறு பிரிவுகளில் கார்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மிகப் பழமையான காராக 1924-ம் ஆண்டைச் சேர்ந்த செவர்லே சுப்பீரியர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் உரிமையாளர் அஸ்வந்த், இதற்கான விருதை பெற்றுக்கொண்டார். 

கண்காட்சியின் சிறந்த காராக 1931-ம் ஆண்டைச் சேர்ந்த டாட்ஜ் பிரதர்ஸ் கார் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் உரிமையாளர் குகன் இதற்கான விருதை பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சிறந்த ஹெரிடேஜ் காராக 1959-ம் ஆண்டைச் சேர்ந்த அம்பாஸடர் மார்க் 2 கார் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் உரிமையாளர் நரேஷ் விருதை பெற்றார். மோட்டார் சைக்கிள் பிரிவில், மிகப் பழமையான மோட்டார் சைக்கிளாக 1928-ம் ஆண்டைச் சேர்ந்த வுல்ஃப் பைக் தேர்ந்தெடுக்கப்பட்டது.


கண்காட்சியின் சிறந்த பைக்காக 1959-ம் ஆண்டைச் சேர்ந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் தேர்ந்தெடுக்கப்பட் டது. இந்தியாவின் சிறந்த ஹெரிடேஜ் பைக்குக்கான விருதை 1968-ம் ஆண்டைச் சேர்ந்த ஜாவா பெற்றது. 

ரோல்ஸ் ராய்ஸ், ஜாகுவார், மோரிஸ், ஃபோக்ஸ்வாகன், பென்ஸ், ஃபியட், ஆஸ்டின், டாட்ஜ், ப்ளைமௌத், சிட்ரன், ஃபோர்டு, வாக்ஸால், அம்பாஸடர் உள்ளிட்ட பல வின்டேஜ் கார்களும், வுல்ஃப், டிரையம்ஃப், ராயல் என்ஃபீல்டு, ஜேம்ஸ், ஜாவா, லாம்ப்ரெட்டா, பிஎஸ்ஏ உள்ளிட்ட வின்டேஜ் பைக்குகளும், ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ஃபெராரி உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் வகை கார்களும் கண்காட்சியில் பங்கேற்றன.

இந்த ராலியில் இரண்டாக மடக்கப்பட்டிருந்த பிஎஸ்ஏவின் 1938-ம் ஆண்டைச் சேர்ந்த ஏர் போர்ன் சைக்கிளும், ஃபோக்ஸ்வாகன் ஆம்புலன்ஸும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. 

ஓல்டு ஈஸ் கோல்டு, உண்மைதான்!  


No comments:

Post a Comment