சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Sep 2015

'விவசாயி விவசாயியாகத்தான் இருக்கணும்...!' - கவுண்ட்டர் கிங் கவுண்டமணி!

டாக்டர் சிவபாலன் தயாரிப்பில், இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ’49 ஓ’.

இசையமைப்பாளர் கே - பாடலாரிசிரியர் யுகபாரதி கூட்டணி இந்த படத்தின் பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்தியன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள, நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை அரங்கம் முழுக்க  அதிரடி, சரவெடிதான். மேடையில் யார் வந்து பேசினாலும், இடையிடையே அசராமல் அவர்களுக்கு கவுண்ட்டர் கொடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

ஆடியோ ரிலீஸ் ஹைலைட் இங்கே...

நடிகர் சத்யராஜ்:
நானும், கவுண்டமணி அண்ணனும் சேர்ந்து நடிச்ச படங்கள் நிறைய வந்தாலும், ஷூட்டிங்ல நாங்க அடிச்ச லூட்டிகளை எப்பவுமே மறக்க முடியாது. அப்ப நாங்க ரெண்டு பேரும் 'வீரநடை' படத்துல நடிச்சிட்டு இருந்தோம். ஒரு படமும் கையில இல்லாத சமயத்துல டைரக்டர் ஒருத்தர் வந்து கதை கேக்குறீங்களான்னு கேட்டார். நான் அதுக்கு பந்தா பண்ணிட்டு இருந்தேன். உடனே கவுண்ட மணி அண்ணன் சொன்னார்.. "எப்படியும் அந்த டைரக்டர் வந்தவுடனே கதவை சாத்திட்டுதான் கதை கேக்கப் போறீங்க...நடுவுல தப்பிச்சு போயிடக் கூடாதுன்னுதான் நினைப்பீங்க. அப்புறம் எதுக்கு பில்டப்?’’னு சொன்னதும் சிரிப்பு தாங்க முடியல. அதுக்கப்புறம் அசிஸ்டண்ட் டைரக்டர் வந்து, 'சீக்கிரம் வாங்க சார்... ஷாட் ரெடியா இருக்கு!' னார். அவ்ளோதான்..'வர முடியாதுன்னு சொல்லுப்பா...எங்களுக்கு இருக்குறதே இது ஒரு  படம்தான் இதையும் நடிச்சி முடிச்சிட்டா அப்புறம் நாங்க படத்துக்கு எங்க போறதாம்?’னு கலாய்ச்சாரு பாருங்க.. லைஃப்ல இவர் அடிச்ச சில கவுண்ட்டர்களை எல்லாம் மறக்கவே முடியாது.
நடிகர் சிவகார்த்திகேயன்:
நான் இந்த நிமிஷம், இப்ப இவர் பக்கத்துல உடகார்ந்து இருக்குறதையே பெருமையா நினைக்குறேன். வந்தவுடனே கவுண்டமணி சார், சத்யராஜ் சார்கிட்ட சொன்னார்...'இந்த படத்துல லவ்வே இல்லையே படம் ஓடுமா?’ ன்னார்..'அதனாலதான் ஒடும்’ ங்கிறார் சத்யராஜ் சார். எனக்கு ஒரு சின்ன ஆசைதான். இவங்க ரெண்டு பேரு சேர்ந்து படம் நடிச்சா, அதுல நானும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். கவுண்டமணி அண்ணன் எப்பவுமே, எதுலயுமே அப்டேட்டா இருப்பார்.. ஒருதரம் அவரை நான் பாக்கப் போயிருந்தேன். 'தம்பி நான் இப்ப காலர் டியூனை மாத்திட்டேன்’னார். சரி என்ன பாட்டு வச்சிருக்கீங்கண்ணே?ன்னு கேட்டா 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்ல வச்சிருக்கேன்’னார். வெளிய வந்து என் பிரண்ட்ஸ்கிட்ட, அப்டீனா என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்கிடேன். அந்த அளவுக்கு அவர் அப்டேட். 'இப்ப கூட உங்ககிட்ட இருந்து காமடியை எடுத்துதான்ணே வித்துக்கிட்டு இருக்கோம்’னு அவர்கிட்ட சொன்னேன். 'அட...இல்லாதவன் இருக்குறவன்கிட்ட எடுத்துக்கிறதுதானே வழக்கம்’னு அசால்ட்டா கவுத்துட்டாரு. அண்ணனோட திறமையில ஒரு 10% என்கிட்ட இருந்தா போதும்...நான் இன்னும் 10 வருஷத்துக்கு இந்த துறையில நிலைச்சிருப்பேன்.
நடிகர் கவுண்டமணி:
படத்தோட கதையை எடுத்துட்டு டைரக்டர் வந்தார். வந்ததும் சொன்னேன்...'முன்னாடியும் வுட்டுடு..பின்னாடியும் வுட்டுடு நடுவுல மட்டும் சொல்லு’ன்னேன். அதுதான் படத்துல வர்ற 'ஆறடி தாய்மடி திட்டம்’. விவசாயம் இல்லைனா உயிர் இல்லை. உலகில்லை அதான் கதை. விவசாயியை இன்னைக்கு யார் வேணும்னாலும் ஏமாத்திட முடியும்ங்கிற சூழல்தான் நிலவுது. தொழிலதிபர், ரியல் எஸ்டேட், கார்ப்பரேட், அரசியல்வாதின்னு ஆளாளுக்கு விவசாயியை வளைச்சு நிலத்தை கையகப்படுத்துறாங்க. விவசாயி தன்கிட்ட இருக்கிறது கால்காணி நிலமா இருந்தாலும் அதை விட்டுக்கொடுக்க கூடாது. அதை வலியுறுத்தி சொல்ற படம்தான் 49ஓ. விவசாயி விவசாயியாதான் இருக்கணும். அதனால நான் மறுக்கா மறுக்கா சொல்றேன்..49ஓ.. இது ஒரு நல்லப்படம்.


தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன்:
பொதுவா,  'ஏன் கவுண்டமணியை வச்சு படம் எடுக்கீறிங்க?ன்னு என்கிட்ட கேட்டாங்க. ஆனா அதுக்கு காரணம் இருக்கு. நான் என்னோட நோயாளிகளுக்கு சொல்றது இதுதான்...நோ வொர்ரி(no worry),நோ ஹரி(no hurry) நோ கரி(no curry). அதாவது கவலை, வேகம், எண்ணெயில் செய்த சமையல் இதெல்லாம் இருக்கக் கூடாது, இதான் அதோட அர்த்தம். அதனால் கவலை இல்லாம இருக்கணும்னா தினமும் காமடி சேனல் பாருங்கன்னு சொல்வேன். அந்த வகையில எனக்கு காமடி கிங் கவுண்டமணி. என்னை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு தேவையான மருந்து. அவருக்கு இந்த நேரத்துல நான் டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் பொருத்தமா இருக்கும்.


No comments:

Post a Comment