சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sept 2015

ஊழலுக்கு எதிராக போராட மெசேஜ்... சாதிக்கும் இளைஞர் பட்டாளம்!

ழலுக்கு எதிராக போராட என்ன தகுதி வேண்டும்? காந்திய கொள்கைகள் அல்லது காந்திய தொப்பி அவசியம்; வயது 60 க்கு மேல் இருக்க வேண்டும். கண்டிப்பாக உண்ணாவிரதம் இருக்க தயாராக இருக்க வேண்டும். 

இவை எதுவுமே இல்லாமல் வெறும் 21 வயதான ஒரு மாணவி தன்னார்வலர்கள் குழுவினருடன் சேர்ந்து, ஊழலை விரட்டியடிக்கும் விதம் மற்ற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் வன்முறையோ, உண்ணாவிரதமோ அல்ல, பேசிக் மாடல் நோக்கியா கைப்பேசிகளே. மோனிகா சிங் மற்றும் நாற்பது தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர், அசாம் மாநிலத்தில் ஆதிவாசிகள் இனத்தினர் வாழக்கூடிய சோனித்பூர் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் ஏற்படும் முறைகேடுகளை தட்டி கேட்க முன் வந்துள்ளனர்.

தேயிலை  தோட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள் பலரும், அரசு மருத்துவமனையில் சொற்ப வசதிகளுக்கும், சிகிச்சைக்கும் அதிகமான பணம் கொடுக்கும் அவலம் உள்ளது. இலவசமாக கிடைக்க வேண்டிய பேறுகால சிகிச்சைக்காக  இவர்கள்படும் அவஸ்தையை சொல்லி மாளாது.
பிறந்ததும் இறந்து போனது அஞ்சலி மசூம்தாரின் பிள்ளை. அதன் பின் அவரை கூரை கூட இல்லாத வராண்டாவில் துணி மூட்டைகளின் மேல் படுக்க செய்தனர். 'பெட்டு'கள் தட்டுப்பாட்டால் இரவு முழுவதையும் குளிரில் கழித்தார் அஞ்சலி. இறந்த குழந்தையை புதைக்கவும், அஞ்சலியின் வயிற்றில் இருந்த மீதம் திசுக்களை அகற்றவும் செவிலியர் ஒருத்தர் கேட்ட லஞ்சம் 800 ரூபாய். “ எண்ட் மெடர்னல் மோர்டாலிட்டி நௌ”  எனப்படும் இயக்கம், கடந்த ஒரு வருடத்தில் இது போன்ற 70 கேஸ்களை கண்டுபிடித்துள்ளது.
மூன்று அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் இந்த இயக்கத்தில் மொத்தம் 40 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களது வேலை, குழுக்களாக பிரிந்து கிராமம் கிராமமாக சென்று கர்ப்பிணி பெண்களையும் , சமீபத்தில் பிரசவித்த பெண்களையும் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனைகளில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிவதே. அப்போது அவர்கள் வைத்திருக்கும் செல்போன்களில் ஒரு மெசேஜை தட்டி விடுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல கோட் வேர்ட் ஒன்று மட்டும்தான் அனுப்புவார்கள்.

உதாரணமாக 25 என்றால், தேவைப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்று அர்த்தம். பல கிளினிக்குகளில் பிரசவ வலியுடன் வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். போதிய பெட்களோ, செவிலியர்களோ இல்லை என்ற புகாரின் நம்பகத்தன்மை ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும்,         அது EndMMNow வலைதளத்தில் தோன்றும். அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படும்.


ஊட்டசத்துக்குறைவும் இந்த இளம் தாய்மார்களுக்கு எமனாக நிற்கிறது. இதனை தடுக்க அரசாங்கம், அங்கன்வாடிகள் மூலம் சத்தான் உணவை வினியோகம் செய்தாலும், அதுவும் ஊழலின் பிடியில் சிக்கி சொற்ப அளவிலான பெண்களையே சென்றடைகிறது. EndMMNow இயக்கம் வந்த பிறகு, பொது மக்கள் மருத்துவ அதிகாரிகளை பார்த்து பயப்படும் நிலை மாறி அவர்கள் இக்குழுவினருக்கு பயந்து,  சரியான சிகிச்சைகளும் வசதிகளும் அளிக்கின்றனர். மகப்பேறு இறப்பு விகிதம் இந்தியாவிலேயே அசாமில்தான் அதிகமாக உள்ளது.  ஆண்டு ஒன்றுக்கு 100000 பிரசவங்களில் 328 தாய்மார்கள் உயிரிழக்கின்றனர். உலக அளவிலும் மகப்பேறு இறப்பு விகிதத்தில் அதிகமாக உள்ள நாடாக உள்ள இந்தியா உள்ளது. 

பிரதமர் மோடி சமீபத்தில் இந்த பிரச்னையை எதிர்க்க,  ' Call For action'  என மற்ற நாடுகளின் உதவியை நாடியுள்ளார். 24 நாடுகள் இந்தியாவில் உள்ள நிலவரத்தை ஆராய உள்ளனர்.

செல்போன் எப்படி இளைஞர்களை கெடுக்கிறது என்று திட்டி தீர்க்கும் முந்தைய தலைமுறைக்கு சவால் விடுகிறார்கள் இந்த இளைஞர் பட்டாளம். திட்டங்கள் தீட்டி, கூட்டங்கள் கூட்டி செய்ய முடியாத மாபெரும் விஷயங்களை விரல் அசைவில் செய்ய முடியும். மெசேஜ் அனுப்பி ஊழலை அசால்டாக தகர்க்கும் இவர்களை முன்னோடிகளாக எடுத்து கொள்ளலாமே...! 



No comments:

Post a Comment