சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sep 2015

'கேப்டனாக வளர்ந்து விட்டதாக கருதவில்லை.. தோற்றால் கத்துக்குட்டி என்பார்கள்!'- விராட் கோலி

லங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

கொழும்பு மைதானத்தில் இன்றைய போட்டி முடிந்ததும் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி கோப்பையை பெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், '' இந்த தொடரை கைப்பற்றி விட்டதால்,  ஒரு கேப்டனாக வளர்ந்து விட்டதாக கருதவில்லை. அடுத்த போட்டியில் தோல்வியடைந்தால் கத்துக்குட்டி அல்லது குழந்தை என்பார்கள்''  என்றார்.

மேலும் கோலி கூறுகையில், '' இளம் இந்திய அணி இத்தகைய அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பின் இத்தகைய வெற்றியை பெறுவது ஒரு மைல் கல் ஆகும். டிரெஸ்சிங் அறையில் நிலவும் இதமான சூழ்நிலையும்  இந்த வெற்றிக்கு ஒரு காரணம். அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. 

புவனேஷ்வர் குமார், வருண் ஆரான் போன்றவர்கள் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை. கடைசி டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கூட களமிறங்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் வெளியே இருந்து அளித்த ஆதரவை மறக்க முடியாது என மேலும் அவர் கூறினார். 

முதல் இன்னிங்சில் சதமடித்த புஜாரா பந்துவீச்சாளர்கள் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்தார். No comments:

Post a Comment