சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sep 2015

அது போன மாசம்.. இது இந்த மாசம்.. ட்விட்டர்வாசிகள் மனமாற்றம்!

டந்த உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி, அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், அனுஷ்கா சர்மாவை வசைபாடிய ட்விட்டர்வாசிகள், இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு விராட் கோலிக்கு பதிலாக, அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 
 
இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதுவும் இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில். இந்த வெற்றிக்காக  இந்திய கேப்டனை விட, அவரது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்குதான்  வாழ்த்து குவிந்து வருகிறது. 

கடந்த உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் மோதியது. இந்த அதி முக்கியமான போட்டியை காண இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் சிட்னி சென்று குவிந்தனர். அனுஷ்கா சர்மாவும் போட்டியை காண சிட்னி சென்றிருந்தார்.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 328 ரன்கள் குவித்து விட, இந்தியா தோல்வியை சந்தித்தது. அனுஷ்கா நேரமோ என்னமோ தெரியவில்லை, விராட் கோலி  ஒரு ரன்னில் அவுட் ஆகிவிட, அனுஷ்கா தலையை தொங்க போட வேண்டியதாகி விட்டது.

அவ்வளவுதான் உடனே சமூக வலைதளங்கள் அனுஷ்காவை பிடித்துக் கொண்டன. தோல்விக்கு காரணம் அனுஷ்காதான் என்று பரப்பின. இந்தியா திரும்பும் போது விராட் கோலி- அனுஷ்கா ஜோடி, மும்பை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
ஆனால் இதே ட்விட்டர்வாசிகள்தான், செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்வது போல தற்போது இலங்கை அணிக்கு எதிரான வெற்றிக்காக அனுஷ்காவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

ஒரு ட்விட்,  'அனுஷ்கா வெல் பிளேயிட்' என்கிறது. 'விராட் கோலி மோசமாக விளையாடினால் உன்னைதான் திட்டுவேன், அவரை பாரட்ட வேண்டுமென்றலும் உன்னைதான் பாராட்டுவேன்... வெல்டன் அனுஷ்கா!' என்கிறது இன்னொரு  ட்விட். 

'உலகக் கோப்பையில் தோற்றதற்கு உன்னை திட்டினோம். வென்றதற்கும் உன்னைதான் வாழ்த்துகிறோம்...!'- இது இன்னொரு ட்விட். '117 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி ....வெல் பிளேயிட் அனுஷ்கா!' என்று ட்விட்கள் கூவோ கூவென்று நேற்று முதல் கூவிக் கொண்டிருக்கின்றன.
தனது பாய் பிரென்டால் இப்போது அனுஷ்கா உச்சி குளிர்ந்து போய் இருக்கிறார். No comments:

Post a Comment