சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sept 2015

''எரிகிற தீயில் எண்ணெய் விடுகிறார் கோலி''! : இஷாந்த் பயிற்சியாளர் குற்றச்சாட்டு

ளத்தில் ஆக்ரோஷமாக செயல்படுமாறு பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை கேப்டன் விராட் கோலி தூண்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிரானத் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை சாய்த்தார். 2-வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்களிடம் எல்லை கடந்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவும் இஷாந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இஷாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அவரது தந்தை விஜயகுமார் கூறுகையில், '' களத்தில் இஷாந்த் ஷர்மா நடந்து கொண்ட விதம் பாராட்டும்படி இல்லை. ஐ.சி.சி. தண்டனை விதித்தது சரிதான்.  இஷாந்த் ஷர்மா தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த பழக வேண்டும். சிறு வயதில் இது போன்ற ஆக்ரோஷமான செயல்பாடுகளை நான் அவரிடம் கண்டது இல்லை''  என்றார்.

இதற்கிடையில் இஷாந்த் ஷர்மாவின் ஆக்ரோஷமான செயல்பாட்டுக்கு கேப்டன் விராட்கோலியும், அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியும் தான் காரணம் என்று இஷாந்த் ஷர்மாவின் இள வயது  பயிற்சியாளர் ஷர்வன்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஷர்வன்குமார் அளித்த ஒரு பேட்டியில், ‘இஷாந்த் ஷர்மா எல்லை மீறி நடந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். இஷாந்த் ஷர்மா ரவிசாஸ்திரியும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட அனுமதித்தது தவறு. அவர்கள் இருவருமே எரிகிற தீயில் எண்ணெய் விடுவது போல, இஷாந்தை துண்டி விடுகின்றனர்.
இஷாந்த் டெல்லி திரும்பியதும் உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டது இஷாந்த் சர்மா மட்டும்தான். இஷாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென இந்திய நிர்வாகம் வேண்டுகோள் விடுக்காதது ஏன்?எதிரணியினரை ஸ்லெட்ஜ் செய்வதிலும் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும்'' என்றார். 



No comments:

Post a Comment