சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sept 2015

பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் ரகசியங்கள்: (வீடியோ)

'பாகுபலி படத்தை பார்த்து எப்படிதான் இப்படியெல்லாம் எடுக்குறாங்க? என்று பலருக்கு மனதில் வியப்புடன் கேள்வி எழுந்திருக்ககூடும்.
அருவி மலை மேலே இருந்து கொட்டுது, இப்படியெல்லாம் இடம் எங்கே இருக்கும்? குழந்தையை ஏந்திய ஒரு கை மட்டும் தண்ணீரில் தெரிகிறது, இப்படி எப்படி நடிக்க முடியும்? எல்லாம் கிராஃபிக்ஸ் னு தெரியுது... ஆனா இதுல எவ்வளவு நிஜம், எவ்வளவு கம்ப்யூட்டரில் உருவாக்கியதுன்னு தெரிஞ்சுக்க எல்லாருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.


 பல ஹாலிவுட் படங்கள்.. ஏன் பாலிவுட் படங்கள் கூட படம் வெளியானதும். வி. எஃப் .எக்ஸ் உருவான விதத்தை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். அதே வழக்கத்தை இப்போது பாகுபலி படத்திலும் பின்பற்றியுள்ளனர்.
MAKUTA VFX Breakdowns என்ற நிறுவனம்தான் பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளது. குழந்தையாக தெரிந்தது படப்பிடிப்பின் போது ஒரு தண்ணீர் பாட்டில்தான் என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.

மகிழ்மதி நகரம், அரண்மனை,சண்டை காட்சியில் வரும் மிருகங்கள், பாடல் காட்சியில் வரும் எழில் கொஞ்சும் மலையருவி. இவை அனைத்தும் ஏதோ ஒரு அறையில், ஆர்டிஸ்ட்கள் கம்ப்யூட்டரில் வரைந்தவையே. க்ரீன் மேட் ஒன்றை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் நம்மள ஏமாத்திருக்காங்க ! சினிமாவே ஒரு கண்கட்டு வித்தை தான் போல !
அந்த கண்கட்டு வித்தையை நீங்களும் இந்த வீடியோவில் பாருங்கள்..! 



No comments:

Post a Comment