சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Sep 2015

உலகை மிரட்டிய சீன ராணுவத்தின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு!

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வென்றதின் 70 ஆவது ஆண்டையொட்டி பெய்ஜிங்கில் சீன ராணுவம் நடத்திய பிரமாண்ட அணிவகுப்பு உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. 

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70 ஆவது ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பினை நடத்தப்போவதாக சீனா அறிவித்திருந்தது.அப்போதிருந்தே அமெரிக்கா,ரஷ்யா,இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கவனமும் சீனாவின் பக்கம் திரும்பியது.
இந்நிலையில்,தலைநகர் பெய்ஜிங்கில் தியான் மென் சதுக்கத்தில்,  அதிபிரமாண்ட ராணுவ அணிவகுப்பை இன்று(வியாழன்) நடத்தி காட்டியது. இந்த அணிவகுப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ராணுவ அணிவகுப்பில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்று உலகின் கண்களை வியப்பில் விரியச் செய்தனர். ஒன்றுபோல ராணுவ வீரர்கள் மிடுக்கோடு அணிவகுத்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலும் 200 விமானங்கள்,100க்கும் மேற்பட்ட டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை மிரட்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.


No comments:

Post a Comment