சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Sept 2015

என் தொகுதிக்கு வாங்க மின் வெட்டை காட்டட்டுமா? ஆவேசப்பட்ட விஜயகாந்த்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை மிக மோசமாக உள்ளது. என் தொகுதிக்கு மின்துறை அமைச்சர் வந்தால் மின்வெட்டை காட்டுகிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு வாழ்வாதார நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூரில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு நல உதவிகளை வழங்கி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசும்போது, ''தமிழகத்தில் 76 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டுவோம் என அறிவித்துள்ளது காலம் தாழ்ந்த அறிவிப்பு. இது ஒரு அரசியல் நாடகம்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவித தொழிலும் முன்னேற்றம் அடையவில்லை. வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் பதனிடுதல் தொழில் மிகவும் நசிந்து விட்டது. தோல் உற்பத்தி தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் நலன் காக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.
ஆனால், தமிழக அரசின் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர். மக்களுக்காக மட்டும் உழைக்க வேண்டிய போலீசார், ஆளும் அரசுக்கு பயந்து பணியாற்றி வருகின்றனர். போலீசார் யாருக்கும் பயப்படாமல் மக்களுக்காக மட்டும் பணிபுரியும் நிலை தே.மு.தி.க. ஆட்சியில் அமரும் காலத்தில் வரும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எந்தத் திட்டங்களும் இதுவரை நிறைவேற்றவில்லை. உதாரணத்துக்கு உடன்குடியில் ரூ. 8 ஆயிரம் கோடியில் அறிவிக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் அறிவித்த நிலையிலேயே உள்ளது. வெறும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும் அரசாக மட்டுமே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை மிக மோசமாக உள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ''வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் மின் வெட்டு இல்லை" என்றார். என் தொகுதிக்கு வாங்க மின் வெட்டை காட்டட்டுமா? அங்கு எத்தனை பேர் என்னிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் தெரியுமா?" என்றார்.



No comments:

Post a Comment