சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Sep 2015

ஈரக்குலையை நடுங்க வைக்கும் ‘இன்ஜக்‌ஷன் சைக்கோ’

ழுத்தை வெட்டும் சைக்கோ, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் சைக்கோ என சைக்கோக்களின் அச்சுறுத்தல் செய்திகள் சில நாட்களாக இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக களத்தில் இறங்கியிருக்கிறான் ‘இன்ஜக்‌ஷன் சைக்கோ’.

ஆந்திர மாநிலத்திலுள்ள, மேற்கு கோதாவரி மாவட்டத்தினர் தற்போது கேட்ட உடனே நடுங்கும் பெயர், ‘இன்ஜக்‌ஷன் சைக்கோ’. இரவில் வெளியில் செல்ல வேண்டும் என்றாலே பயந்து நடுங்குகின்றனர். அதற்குக் காரணம், கண்ணிமைக்கும் நேரத்தில் ஊசியால் தாக்கும் இந்த ‘இன்ஜக்‌ஷன் சைக்கோ’. ஒரு மோட்டார்சைக்கிளில் வந்து யாரும் காணாத நேரத்தில், குறி வைத்தவர்களின் மீது ஊசி ஒன்றை செலுத்திவிட்டு கண நேரத்தில் கண்ணிலிருந்து மறைந்து விடுவதுதான் இவனது டெக்னிக்.. 


கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 25 பேருக்கும் மேல் இந்த சைக்கோவால் தாக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 22 ஆம் தேதி இரவு, சவாரிக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர்தான் இவனது முதல் இரை. அதைத் தொடர்ந்து இளம்பெண்களையே குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்த இவன் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நரசபுரம் என்ற கிராமத்தின் அருகே மூன்று வயதுக் குழந்தையை ஊசியால்
தாக்கியிருக்கிறான்.  இவனால் தாக்குதலுக்குள்ளானவர்கள் உடனேயே சுயநினைவினை இழந்து மயங்கி
விடுகின்றனர். 

மிகமிக எச்சரிக்கையுடன் செயல்படும் இந்தச் சைக்கோ, இதுவரை ஒரு இடத்தில் கூட, எந்தத் தடயத்தை யும் விட்டுச் செல்லவில்லை என்பது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம்.

குறிப்பாக, தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஊசியையோ, அதில் ஏற்றப்படுகிற திரவத்தின் குமிழ் போன்ற தடயங்களையோ, போலீஸாரால் எங்கும் கண்டெடுக்க முடியவில்லை. சைக்கோ மனிதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரிதும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அவனைப் பிடிக்க 45 ‘ஷ்பெஷல் டாஸ்க்

ஃபோர்ஸ்’ என்கிற சிறப்புப் படைகளை அமைத்ததுள்ளது காவல்துறை.  “இந்த ஊசித்தாக்குதல்களை நடத்துவது ஒரு தனிமனிதனா அல்லது குழுவினரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஊசி வழியாக செலுத்தப்படும் திரவம் என்ன என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
வீக்கம் எதுவும் ஏற்படாத காரணத்தால் வெறும் ஊசியால் குத்தி, காற்றை உடம்புக்குள் செலுத்தும் முயற்சியாகவும் இருக்கலாம். இனி எவ்வகையிலும், இச்சம்பவங்கள் தொடராதபடி  காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.” என்கிறார் மேற்கு கோதாவரி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பூஷண்.

இதனிடையே நரசபுரம் மாவட்டம் ’மொகலுத்தூர்’ பகுதியிலும் ஒரு குழந்தையைத் தாக்கிவிட்டு மாயமாகி இருக்கிறான் இந்த சைக்கோ.  தாக்குதலுக்குள்ளானவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சைக்கோவின் மாதிரி முகத்தை வரைந்துள்ள காவல்துறை, சைக்கோ குற்றவாளி குறித்து தகவல் அளிப்போருக்கு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மருந்துக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர் களை கண்காணித்து தகவல் தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்களிடமும், தேவை இருந்தாலன்றி, நோயாளிகளை ஊசி வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்லுமாறு சீட்டு எழுதித்தர வேண்டாமென்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக் கிறது. அண்மையில் வேலையைவிட்டுச் சென்ற

மருந்தாளுநர்களையும், மருத்துவப் பிரதிநிதிகளையும் காவல் துறையினர் கூர்ந்து விசாரித்து வருகின்ற னர். ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா “இந்த ‘ஊசி மனிதன்’ விரைவில் பிடிபடுவான்” என்று
தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், ஆந்திராவில் 2012 ஆம் ஆண்டு பெண்களைத் துரத்திக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின் காவல்துறையினர் பிடியிலிருந்துத் தப்பியோடிய ‘சைக்கோ
சம்பா’ இன்னும் வெளியில் சுதந்திரமாகத்தான் உலவிக் கொண்டிருக்கின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
காவல்துறை அதையும் குறிப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.No comments:

Post a Comment