சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

எந்த பள்ளியில் சுந்தர்பிச்சை படித்தார்? குழப்பிய விக்கிப்பீடியா!

மிழகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை கூகுள் சி.இ.ஓ ஆனதும், விக்கிப்பீடியா பக்கத்தில் அவர் படித்த சென்னை பள்ளிகள் பற்றி, பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
உலகப் பணக்கார நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த 43 வயது சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டத் தகவல் வெளியானதும், இணையத் தமிழர்கள் சுந்தர்பிச்சை பற்றிதான் தற்போது பேசுகின்றனர்; பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கூகுள் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதும், அவரை பற்றி அறிந்து கொள்ள சுந்தர்பிச்சையின் விக்கிப்பீடியா பக்கத்தை, இன்று ஒரே நாளில் லட்சக்கணக்கான இணையதள பயன்பாட்டாளர்கள் பார்வையிட்டனர்.
கடந்த ஜுலை 30ஆம் தேதி, சுந்தர்பிச்சையின் விக்கிப்பீடியா பக்கத்தை பார்வையிட்டபோது, அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள வனவானி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் அவர் படித்ததாக காட்டியது. 
ஆனால் நேற்று கூகுள் சி.இ.ஓ ஆனதும், பத்மா ஷேசாத்ரி பால பவன், ஜி.ஆர்.டி மகாலட்சுமி, ஆல் ஏஞ்சல்ஸ், பி.எஸ்.பி.பி. என பல பள்ளிகளில் சுந்தர்பிச்சை படித்ததாக காட்டியது. இதனால் அவரது பள்ளி படிப்பு குறித்து குழப்பமான நிலையே காணப்பட்டது. ஒவ்வொரு முறை விக்கிப்பீடியா பக்கத்தை பார்த்த போதும் ஒவ்வொரு பள்ளியில் அவர் படித்ததாக காட்டியது.  

அதாவது நேற்று  ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு  8.30 மணிக்கு மேல் 11ஆம் தேதி வரை சுந்தர்பிச்சை படித்த பள்ளி குறித்து விக்கிப்பீடியா பக்கம்  75 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேல்படிப்பு சுந்தர்பிச்சை காரக்பூர் ஐ.டி.டியில்   படித்ததாக உறுதிசெய்யப்பட்டத் தகவல் இருந்ததால், அதில் எந்த குழப்பமும் இல்லை.  


No comments:

Post a Comment