சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

விருப்பம் இன்றிதான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது: நத்தம் விஸ்வநாதன் விளக்கம்!

தமிழக அரசு விருப்பம் இல்லாமல் தான் மதுக்கடைகளை நடத்துகிறது என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்டந்தோறும் அ.தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் மைதானத்தில் மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஐவர் அணி அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், கே.பழனிசாமி, பி.பழனியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, ஜெயலலிதாவை வரவேற்பது போல், சாலைகள் எங்கும் ப்ளக்ஸ் பேனர்கள், கொடி, தோரணங்களால் அமைச்சர்களை வரவேற்று நகரத்தையே கலங்கடித்திருந்தனர் ரத்தத்தின் .ரத்தங்கள்.

இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது, ''2016ல் அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்லி வருகிறார் அன்புமணி ராமதாஸ். அதையும் நாங்கள் தேர்தலில் பார்க்கத்தானே போகிறோம். அவரால், தைலாபுரத்தில் ஒரு கவுன்சிலராக ஜெயிக்க முடியுமா? தைலாபுரத்திற்க்கு பக்கத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில், வன்னியர் மக்களுக்கு ஒரு டெக்னீசியன் சீட்டு வாங்கி கொடுத்துள்ளாரா? ஆனால், எங்கள் அம்மா ஐம்பது சீட்டு வாங்கி கொடுத்துள்ளார்" என்றார்.
அமைச்சர் பழனியப்பன் பேசும்போது, ''இந்த மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் நீதி கேட்க்கும் கூட்டத்தை நடத்தினார். அவருக்கு நிதி கேட்டுத்தானே பழக்கம், நீதி கேட்க என்ன தகுதி இருக்கிறது. அப்படி நீதி கேட்க வேண்டுமானால், அவருடைய அப்பாவிடம் போய் கேட்க வேண்டியது தானே ஏன் இன்னும் எனக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை, ஏன் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை? என்று, அம்மாவிடம் கேட்டால் என்ன நியாயம்" என்று கிண்டலடித்தார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, ''தமிழக அரசு விருப்பம் இல்லாமல் தான் மதுக்கடைகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால், தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். அப்படி செய்வதால், தமிழகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்கப்பட வாய்ப்பு உள்ளது. மது உற்பத்தி ஆலைகளுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் மது விற்கப்படவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியாக பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ''சமீபத்தில் புல்தடுக்கி பைல்வான் ஸ்டாலின் இங்கு கூட்டம் ஒன்றை நடத்தினார். அது நீதி கேட்கும் கூட்டமாம். அதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கு. கடந்த ஆட்சியை திரும்பி பார்க்க வேண்டும் ஸ்டாலினும், கருணாநிதியும். எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை. நில அபகரிப்பு செய்யாத அமைச்சர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா?. இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அதற்க்கு யார் காரணம்? மின்சார தட்டுபாட்டுக்கு யார் காரணம்? என்று நாங்கள் தான் நீதி கேட்க வேண்டும்" என்றார்.No comments:

Post a Comment