சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மாட்டோம்: ஓஎன்ஜிசி விளக்கத்தால் தடை நீக்கம்!

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மாட்டோம் என்ற ஓஎன்ஜிசி விளக்கத்தால் இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். 

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி), திருவாரூரை சுற்றியுள்ள காவிரி படுகையில் ஒரு திட்டப் பணியை தொடங்கியுள்ளது. திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டதா, இல்லையா? என்பதில் முரண்பாடு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மீத்தேன், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஆதலால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, ஓஎன்ஜிசி மேற்கொண்டு வந்த பணிக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து மீண்டும் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஓஎன்ஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 1984 முதல் காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அதற்காக மத்திய அரசினுடைய சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. மீத்தேன் எடுக்கும் திட்டம் எதுவும் ஓஎன்ஜிசியிடம் இல்லை. நாடு முழுவதும் 600 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 200 இடங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மட்டுமே எடுக்கப்படுகிறது" என வாதாடினார். இதனையடுத்து, ஓஎன்ஜிசி பணிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, அமர்வு உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்த விசாரணை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஆஜராகினர்.

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓஎன்ஜிசி விளக்கம் அளித்ததைத் தொடர்ந்தே, அதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை பசுமைத் தீர்ப்பாயம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் மீத்தேன், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



No comments:

Post a Comment