சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

சூப்பர் ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை அதிர்ச்சி... தமிழுக்கு வருகிறார் கிரிக்கெட் ஸ்டார்!

சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்  கதாநாயகனாக நடிக்கவுள்ள படம்  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாராகிறது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சானா எடிரெட்டி இயக்குகிறார். மிக பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்த படம் 14 இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது. ஐ.பி.எல். தொடரை மையமாக வைத்து தயாரிக்கப்படும் இந்த படத்தின் சூட்டிங்கை 6 மாதங்களில் முடித்து விட படப்பிடிப்பு குழு திட்டமிட்டுள்ளது. 

இதற்கு முன் பூஜா பட்டின் பாலிவுட் படமான 'கார்பெட்'டில் வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். ஆனால் முதல் முறையாக இந்த படத்தில்தான் கதாநாயகனாக நடிக்கிறார். இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், ''தென்னகத்தில் இதுதான் எனது முதல் படம். தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களுல் ஒருவராக என்னை அங்கீகரிக்கும் வகையில் இந்த படம் இருக்கும்'' என்றார்.

கேரள முதல்வர் ஆதரவு
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது சூதாட்டப்புகார் எழுந்த நிலையில் கேரளத்தின் காருண்யா லாட்டரிக்குபிராண்ட் அம்பசடராக நியமிக்கப்பட்டிருந்த அவர் உடனடியாக அதிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கேரள முதலமைச்சர் உம்மண் சாண்டி நேற்று கூறுகையில், '' இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் விரும்பினால் மீண்டும் தூதுவராக செயல்படலாம்'' என்றார்.
ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டத் தடையை பி.சி.சி.ஐ விலக்குமாறு கேரள அரசு நிர்பந்திக்குமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''நாங்கள் ஒரு மாநில அரசு. எங்களுக்கு பி.சி.சி.ஐ.க்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை. எனினும் இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐக்கு கோரிக்கை விடுக்கவும் தயக்கம் இல்லை. ஸ்ரீசாந்த் கேரளத்தின் சொத்து அவருக்காக எங்கள் அரசு எதையும் செய்யத் தயாராக உள்ளது '' எனத் தெரிவித்தார்.

ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்குமாறு கடந்த வாரம் கேரள கிரிக்கெட் சங்கம் பி.சி.சி.ஐக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்துக்கு இன்னும் பி.சி.சி.ஐ பதிலளிக்கவில்லை. இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற 3வது கேரள வீரர் ஸ்ரீசாந்த் ஆவார்.



No comments:

Post a Comment