சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

சென்னை வந்த மோடியை நேரில் வரவேற்றார் ஜெயலலிதா!

கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.
 
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா, முதல் முறையாக சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 

இதற்காக அவர் இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ரோசய்யா முதலில் வரவேற்றார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா, மோடிக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.


இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கி வரவேற்பை மோடி ஏற்றுக் கொண்டார்.
பின்னர், அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு புறப்படுகிறார். அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். சிறந்த நெசவாளர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். அங்கு நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்பின் பிரதமர் மோடி, போயஸ் கார்டனுக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாகவும், அங்கு அவர்கள் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் அங்கிருந்து புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, மதியம் 2 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பிரதமர் சென்னை வருவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 1,000 போலீசாரும், விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரம் போலீசார் மீனம்பாக்கம் விமானம் நிலையம் முதல் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரையுள்ள 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் வரிசையாக பா.ஜ.க. தொண்டர்கள் நின்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.No comments:

Post a Comment