சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Aug 2015

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? சிபி ராஜ் ட்விட்டரில் கொடுத்த பதில்!

சினிமா ரசிகர்களின் ஒரே கேள்வி இப்போதைக்கு ’பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக வந்த சத்யாராஜ் ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது தான். சில குறும்புக்கார வலைவாசிகள் மீம்ஸ்களை கூட இதற்காக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலர் இருட்டுக்குள்ள எதிரின்னு நினச்சு பாகுபலியை கட்டப்பா பலி செய்து விட்டார் என கிண்டலும் அடிக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் அந்தக் கொலையையே நீங்கள் தான் செய்றீங்க என ராஜமௌலி கதை சொல்லியிருப்பாரோ என்ற ரீதியில் மகா நடிகனின் அந்தக் குழந்தையே நீங்க தான் பாணியில் மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர். 

இதன் காரணத்தை தெரிந்துகொள்ள விரும்பிய சிலர் இதை டுவிட்டரில் இருக்கும் அவருடைய மகன் சிபிராஜிடம் கேட்டு குடையத் துவங்கி விட்டனர். இதற்கு சிபி ராஜ் படு கிண்டலாகவே பதிலளித்து கலகலப்பாக்கியுள்ளார். 
சிபிராஜ்  தனது ட்விட்டரில் இயக்குநர் ராஜமௌலி இந்த படத்தில் அவரை பாகுபலியாக நடிக்க வைக்க வில்லை, அந்த கோபத்தில் தான் அப்பா பாகுபலியை கொன்று விட்டார்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார். இவர் கேரக்டரையும் புரிஞ்சுக்கவே முடியலை
இதற்கும் தற்போது மீம்ஸ்களை உருவாக்கிவிட்டனர் வலை குறும்பர்கள்! No comments:

Post a Comment