சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

மது ஆலையில் எனது உறவினர்கள்தான் பங்கு வைத்துள்ளனர்: டி .ஆர் .பாலு விளக்கம்

துபான ஆலை எதிலும் பங்குதாரராக நானோ எனது குடும்பத்தினரோ இல்லையென்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு விளக்கமளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். மதுவிலக்கை வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 10ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்கள் திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் மதுபான ஆலைகள் நடத்துவதாகவும் புகார் எழுந்தது. 

இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், '' மது ஆலைகளை நடத்துவதாக என்னை பற்றி வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கருணாநிதியை சந்தித்தேன். எனது பெயரிலோ எனது குடும்பத்தினர் பெயரிலோ மது உற்பத்தி ஆலைகள் இல்லை.
எந்த மதுபான ஆலையிலும் நானோ எனது குடும்பத்தினரோ பங்குதாரராக இல்லை. தமிழகத்தில் மதுபான ஆலைகளில் எனது உறவினர்கள் சிலர் பங்குதாரர்களாக உள்ளனர். மது விலக்கு அமல்படுத்தும் பட்சத்தில் அதன் உரிமத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்துவேன்'' என்றார்.

டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான மது ஆலை என்று கூறப்பட்ட கோல்டன் வாட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமரவேல், எழுதிய கடிதத்தையும் விளக்கமளித்த போது நிருபர்களிடம் டி.ஆர். பாலு காட்டினார். 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின்,'' எங்கள் தரப்பில் நாங்கள் முடிவெடுத்து அறிவித்து விட்டோம். மிடாஸ் நிறுவனத்தின் நிலை என்ன?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 No comments:

Post a Comment