சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

இனி காத்திருப்பு பட்டியலிலுள்ள பயணச்சீட்டின் நிலை அறிய காத்திருக்க தேவையில்லை!

ண்டிகைகள், வார இறுதிகளில் ஊருக்கு செல்லும் பயணங்கள், திடீர் பயணங்கள் போன்றவைகளின்போது பெரும்பாலும் நாம் எதிர்கொள்ளும் தலைவலி ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டிக்கெட்டுகள். கிடைக்குமா கிடைக்காதா என கடைசி மணி நேரம் வரை நகம்கடித்துக் காத்திருக்க வேண்டிய கவலை இனி இல்லை!
இதே பிரச்னையை பல முறை எதிர்கொண்ட ஸ்ரீபத் வைத்யாவும், தினேஷ் குமார் கோத்தாவும் இணைந்து இதற்கொரு தீர்வு கண்டுள்ளனர்.

இருவரும் அடிக்கடி பயணிக்கும் ‘பெங்களூர் எக்ஸ்பிரஸ்’ (12785) ரயிலின் முன்பதிவு மற்றும் ரத்தான பயணச்சீட்டுகளில் ஒரு pattern இருப்பதை கூர்ந்து கவனித்து வந்த இவ்விருவரும் அதை ஆராய்ந்து, தொடர்ந்து ‘காத்திருப்பு பட்டியலில்’ முன்பதிவு செய்து அவையனைத்தும் கன்ஃபர்ம் டிக்கெட்டுகளாக மாறுவதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனை அப்படியே ஒரு சாஃப்ட்வேராக மாற்றியமைத்ததுதான் ‘ConfirmTkt’ மென்பொருள்.

இந்த மென்பொருள் ‘machine learning’ என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகிறது. முந்தைய அனுபவங்களைக் கொண்டு, எதிர்கால வாய்ப்பை கணித்துக் கூறுவதே இதன் செயல்பாடு. பண்டிகை காலங்கள், பயணம் செய்யும் நாள் (வார இறுதியா? வார நாளா?), பயண வகுப்பு (முதல், இரண்டாம், ஸ்லீப்பர், ஏசி), ரிசர்வேஷன் கோட்டா போன்ற அளவுருக்களை கருத்தில் கொண்டு, இந்த மென்பொருள் இயங்குகிறது. இந்த வகையான ட்ரெண்டுகளை இந்த மென்பொருள் தனித்தனியாக சேமித்துக்கொண்டே வருகிறது. இதன் மூலம் கணிப்பு சுலபமாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

பயணச்சீட்டின் கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் சப்ஸ்க்ரைப் செய்து கொண்டு,  கன்ஃபர்ம் ஆனவுடன் ஈமெயில் நோட்டிஃபிகேஷன் பெறும் வசதியும்,  கன்ஃபர்ம் வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் மாற்று வழிகளையும் வழங்குகிறது இந்த மென்பொருள்.

பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பே கூட,  இரு நிலையங்களுக்கும் நடுவே இயங்கும் வெவ்வேறு 
ரயில்கள் என்னென்ன என்பதைத் தேடி கன்ஃபர்ம் ஆகும் வாய்ப்புகளை இந்த மென்பொருளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் ப்ளாட்ஃபார்மில் இயங்கும் வசதியுடன் வந்துள்ளது.

தீர்வு கண்டவர்களைப் பற்றி...

ஸ்ரீபத் வைத்யா, ஐபிஎம்மில் பிஸினஸ் அனலிஸ்ட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மென்பொருள் பொறியாளர்.  தினேஷ் குமார் கோத்தா NIT ஜம்ஷெட்பூரில் படித்தவர். இருவரும் ஐபிஎம்மில் ஒன்றாக பணியாற்றியவர்கள்.

2012ல் துவங்கப்பட்ட இந்த ConfirmTkt ப்ராஜெட்டில் கிட்டத்தட்ட 2500 ரயில்களின் பேட்டர்ன்களை சோதித்து 88 சதவீதம் துல்லியத்தைக் கொண்டுவர, இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இவர்கள், "நாங்கள் இன்னும் வருவாய் நோக்கத்தோடு செயல்படத் துவங்கவில்லை. தற்போது எங்கள் இலக்கு பயனர்களைக் கையகப்படுத்துதலும், தயாரிப்பு மேம்பாடும் மட்டுமே. தற்போது ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறோம்.
வருங்காலத்தில் மற்ற போக்குவரத்துகளிலும் கவனம் செலுத்துவோம். மேலும் எங்கள் மென்பொருள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும், இன்னபிற பயணச்சேவைகளையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்கள்.

ConfirmTkt app டவுன்லோட் செய்ய: 

https://play.google.com/store/apps/details?id=com.confirmtkt.lite&hl=en





No comments:

Post a Comment