சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

முதல்வர் ஜெயலலிதா கதையில் ரம்யா கிருஷ்ணனா?

முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 
ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு தீணி போடும் பாத்திரமாச்சே என நமக்கும் கொஞ்சம் பரபரப்பு தொற்றிக் கொள்ள இதை ரம்யா கிருஷ்ணன் தரப்பிலேயே கேட்டுவிடுவோம் என அவரது சகோதரி வினயாவிடம் விசாரித்தபோது, 

என்ன அப்படி ஒரு செய்தி பரவுகிறதா, என ஆச்சர்யப்பட்டவர், கண்டிப்பாக இல்லை என மறுத்தார். மேலும் இந்தக் கதை குறித்து யாரும் தங்களிடம் பேசவில்லை எனவும் தெளிவாக கூறினார். மேலும் இது நல்ல கதையாயிற்றே. ஒருவேளை அப்படி நடிக்க இருப்பின் கண்டிப்பாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து செய்தியை நாங்களே வெளியிடுவோம் என்றார். 
உண்மையும் அதுவே , சினிமா , அரசியல் தாண்டி ஒரு பெண்ணாக அதுவும் தனி ஆளாக இருந்து ஆட்சி பீடத்தை பிடிப்பது என்பது சாதரணமான விஷயம் அல்ல. ஜெயலலிதா கதையெனில் கண்டிப்பாக நடிப்பதற்கும், காட்சிகள் வடிவமைப்புக்கும் சிறந்த கதைக்களமாகவே இருக்கும். மேலும் இந்தக் கதையில் ரம்யா கிருஷ்ணனின் பெயர் அடிப்பட்டதிலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.கம்பீரம், சோகம், வீரம் என நடிப்புத் திறமை கொஞ்சம் அதிகமாகவே உள்ள நடிகை என்பதால் இந்த கதை படமாக ஒருவேளை எடுக்கப்பட்டால் தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் மற்றும் பெண் முக்கியத்துவம்  வாய்ந்த படமாகவே இருக்கும். இயக்குநர்கள் கவனிக்க



No comments:

Post a Comment