சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

ரஜினியைச் சீண்டும் மகேஷ்பாபு!

மகேஷ்பாபு நடித்து தெலுங்கில்  வெளியாகியிருக்கும் படம் ஸ்ரீமந்துடு.  செல்வந்தன் என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஸ்ருதிஹாசன், சம்பத், ஜகபதிபாபு, சுகன்யா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடிப்பில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் கோரட்டல சிவா இயக்கியிருக்கியிருக்கும் இப்படத்தை மகேஷ்பாபுவே தயாரித்திருக்கிறார்.

கடந்த படங்களின் தோல்வியினால் நிச்சயம் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மகேஷ்பாபு, படம் வெளியாகும் இறுதி நேரத்தில் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டார். அதற்கான புரோமோஷனும் சென்னையில் நடைபெற்றது.  

தமிழில் வெளியான செல்வந்தன் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு என்று போட்டிருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்குப் படத்தில் சூப்பர் ஸ்டார் என்று பட்டத்துடன் வெளியிடுவதில் எந்த தவறுமில்லை. ஆனால் தமிழில் டப் செய்து வெளியிடும் போது  சூப்பர் ஸ்டார்  பட்டத்தை எப்படிப் போடலாம் என்று ரஜினி ரசிகர்கள்  கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும் தான். வேறு யாருமில்லை என்று ரஜினிரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். No comments:

Post a Comment