சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Aug 2015

விபத்தில் அரைசதம் அடித்த சென்னை விமான நிலையம்!

சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் 50வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது இந்த விபத்து நடந்துள்ளது.

2,300 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில், அவ்வப்போது மேற்கூரை மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி விட்டது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதையடுத்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ,  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றார். இருப்பினும், இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

சென்னை விமான நிலையம் தனியார் மயமாக்கப்பட இருப்பதால் பராமரிப்புப் பணிகள், உடைந்து விழும் பகுதிகளை சரி செய்யும் பணிகளை செய்வதில் அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்பட்டுவரும் நிலையில், உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியின் ஒன்றாவது நுழைவு வாயில் கதவருகே, நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மீண்டும் கண்ணாடி விழுந்து நொறுங்கியது. 

சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது இவ்விபத்து நடந்துள்ளது.

 
இது, கடந்த 2013ஆம் ஆண்டு இந்த புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த 50வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகும், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் இங்கே வந்து, செல்லும் பயணிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

2014-15ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,  14.19 மில்லியன் பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையத்தில் இருந்து  நாள் ஒன்றிற்கு சுமார் 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
 
இந்திய விமான நிலையங்களில் 3வது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில், அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை  புகார் தெரிவித்தபோதும், இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.




No comments:

Post a Comment