சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Aug 2015

3000 மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்குப் பரிந்துரை!

தமிழகத்தில் பள்ளிகள்,கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளன.  

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கல்லூரிமாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகினறனர். அரசியல் கட்சிகளும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடையை மூடும் போராட்டத்தில உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியில் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை விற்பனையாளர் செல்வம் பரிதாபமாக இறந்தார். மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்த திடீரென பலர் வருவதால் அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை கவனிக்கும் உள்துறை செயலாளர் அபூர்வவர்மா,  போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் டி.ஜி.பி. அசோக் குமார், உளவுப்பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள்,  மருத்துவமனைகள் அமைந்திருக்கும்  பகுதிகளில் எத்தனை மதுக்கடை உள்ளன என்று பட்டியலிட்டு அறிக்கையாக அளித்துள்ளனர். இதில் சுமார் 3 ஆயிரம் கடைகள் இடம் பெற்றுள்ளன.

மதுக்கடைகளை குறைப்பது பற்றி அரசு முடிவெடுத்தால் தமிழ்நாட்டில் உள்ள 6250 மதுக்கடைகளில் சுமார் 3 ஆயிரம் கடைகளை மூடலாம் என்பதற்கேற்ப இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாகவே முதல்வர் ஜெயலலிதா மதுக்கடைகளை மூடுவது பற்றி முக்கிய அறிவிப்பை வருகிற 15 ஆம் தேதி சுதந்திர தின கொடியேற்று விழாவில் அறிவிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

முதற்கட்டமாக பள்ளி, கல்லூரி வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாவதுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குறைக்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு 6 மாத கால அவகாசம் கொடுத்து, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என தெரிகிறது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்போது உயர் ரக மதுபான 'எலைட்' மதுபானக்கடைகள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது
No comments:

Post a Comment