சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Aug 2015

200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூரில் வரலாறு காணாத வெள்ளம்!

200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.


பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. 60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment