சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Aug 2015

2 ரயில்கள் தடம்புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 24 பயணிகள் பலியான சோகம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்று இரவு 2 ரயில்கள் தடம்புரண்டு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 300 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில், 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா அருகே நேற்று இரவு காமயானி மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு விரைவு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 15 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்ததால் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காமாயானி  எக்ஸ்பிரஸ் ரயில் வாரணாசியில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த போது, போபாலில் இருந்து 160 கி.மீ.தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்துள்ளது. இந்த விபத்து நடந்த அதே இடத்தில் ஜபல்பூர்-மும்பை இடையே செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம் புரண்டது.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே மீட்புக்குழுவினர், தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய 300 பேரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ள நிலையில், இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும், தடம் புரண்ட ரயிலில் இருந்து தப்பிக்க முயன்ற 2 பயணிகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மூன்று சிறப்பு ரயில்கள் மூலம் மருத்துவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கன மழையால் பாலத்தில் இருந்த ரயில்வே தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 2 ரயில்கள் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விரைந்துள்ளார்.
ரயில்கள் விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. மும்பையில் இருந்து செல்லும் 25 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேலும், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்து உள்ளது.

15 ரயில் பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளதால், இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் இரங்கல்...

மத்தியபிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''ரயில் விபத்து மீட்புப்பணிகளை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. மீட்புப் பணிகளை துரிதமாக செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறி உள்ளார்.No comments:

Post a Comment