சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

விக்ரமின் புதியபட விவகாரத்தில் நடப்பது என்ன? புதிய தகவல்கள்

அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா புறப்படவிருந்த நேரத்தில் கலைப்புலிதாணுவால் அந்தப்பயணம் தடைபட்டதெனச் சொல்லப்பட்டது.
அந்தநேரம் வெளிநாட்டிலிருந்த தயாரிப்பாளர் கருணாமூர்த்தி, சென்னை வந்ததும் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கியதென்று சொல்கிறார்கள். முதல் சந்திப்பு மிகவும் கடுமையானதாக இருந்ததென்றும் தெரிகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில், இந்தப்படத்துக்காக நிறையச் செலவு செய்திருக்கிறேன் அவற்றைக் கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்குப் போகட்டும் என்று தாணு சொன்னதாகச் சொல்லப்படுகிறது.


இந்தப்படத்தின் கதை உருவாக்கத்துக்காகச் செய்த செலவு, இந்தப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்குக் கொடுப்பட்ட முன்பணம் ஆகியவற்றோடு இந்தப்படத்தின் இந்திஉரிமையில் பங்கு வேண்டும் என்றும் தாணு தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறதாம்.
இவை மட்டுமின்றி இந்தப்படத்துக்காக இயக்குநருக்குக் கொடுக்கப்படுகிற சம்பளத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தமக்குத் தரவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

சிக்கலின் அடிப்படையே இந்த இயக்குநர் தாணுவிடம் சொல்லாமலே இந்த நிறுவனத்துக்குப் படம் இயக்கப்போனதுதான் என்றும் அதனால் தாணு தரப்பில் இவ்வளவு நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து இது சம்பந்தமாகப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம். இன்னும் முடிவு எட்டப்படவில்லையென்றும் சொல்லப்படுகிறது. 

தாணுவின் கோரிக்கைகளின் பெரும்பகுதியை தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஏற்றுக்கொள்ள முன் வரலாமென்றும் அவ்வாறு நடந்தால் சிக்கல் முடிவுக்கு வருமென்றும் சொல்லப்படுகிறது.



No comments:

Post a Comment