சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Jul 2015

ஆஷஸ் - இது கிரிக்கெட் அல்ல போர்!

லகில் பல காரணங்களுக்காக போர் நடந்து பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா?
வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக் கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். கிரிக்கெட்டை இப்படி ரசிகர்களும், வீரர்களும் போர் போல பார்க்கிறார்கள் என்றால் அது ஒன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டியாக இருக்கும், இன்னொன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டியாக இருக்கும்.
இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் போட்டிகளில் மோதிக் கொள்ளும் போட்டிகள் அனைத்தும் 1882க்கு பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று  ஆஷஸ் தொடரின் 69வது தொடர் ஆரம்பிக்க உள்ளது.
அது என்ன ஆஷஸ்?
'ஆஷஸ் போட்டிகள் என்றால் ஏன் இவ்வளவு கோபம்? களத்தில் ஏன் இத்தனை ஆக்ரோஷம்...? ' என்ற கேள்விகள் பலருக்குள் எழுவது உண்டு. மற்ற ஒருநாள், டி20 போட்டிகளில் கூட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து வீரர்கள் இவ்வளவு ஆக்ரோஷம் காட்டுவதில்லை. ஏன் ஆஷஸுக்கு மட்டும் இவ்வளவு கோபம் என்றால், 1882ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை.
ஆனால் 1882ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது. இத்தனைக்கும் அந்த ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து தோற்று இருந்தது. தொடரை கைப்பற்றியது இங்கிலாந்துதான். ஆனாலும் ஓவல் தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிக்கையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்',  ''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது'' என இரங்கல் செய்தியாக அறிவித்தது.
பின்னர் 1882-83களில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று டெஸ்ட் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்கு பரிசாக மெல்பர்னை சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
அதன்பின் 20 வருடங்கள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வ தொடர் துவங்கப்பட்டது. 1921 ல் லண்டனை சேர்ந்த பத்திரிக்கையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பை அது.
தற்போது அந்த கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்சிசியில் பாதுகாக்கப்படும். ஆனால் இது பிள்க்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்று கூறப்படுகிறது. புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தா? ஆஸ்திரேலியாவா?
இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்றுவருகிறது. இதுவரை 68 தொடர்கள் நடைபெற்றுள்ளது.இதில் மொத்தம்  டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 128 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 103 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன, 89 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளையும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி அதிகமான போட்டிகளையும் வென்றுள்ளது. 68 தொடர்களில் ஆஸ்திரேலியா 32 தொடர்களையும், இங்கிலாந்து 31 தொடர்களை வென்றுள்ளது. இந்த தொடரை இங்கிலாந்து வென்றால் சமமாக இருக்கும்.
 

வார்னே, ஃபிளின்டாப், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989க்கு பிறகு தொடர்ந்து தோற்ற இங்கிலாந்து 2005ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் என பெரும்படையோடு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை 'ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்' ஆக்கியது. பின்னர் ஹாட்ரிக் தொடர் ஜெயித்த இங்கிலாந்து கடைசி ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது.
இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் இரு அணிகளும் புதிய திறமைகளைதான் பெரிதும் நம்பி உள்ளன. களத்தில் வெற்றி தோல்விகளை விட ஸ்லெட்ஜிங் எனும் வசைபாடுதல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து குக் என்றால் ஆஸ்திரேலியா வாட்சன் என்றும், ஆஸ்திரேலியா ஜான்ஸன் என்றால், இங்கிலாந்து ஆண்டர்சன் என்றும் கூறி மிரட்டி வருகின்றன.
அட என்னப்பா இது 5 அங்குல கோப்பைக்கா இந்த அக்கப்போர் என்றால் ஆம்! நாளை துவங்க உள்ள ஆஷஸ் வெறும் கிரிக்கெட் அல்ல ஒரு போர்தான்! 

No comments:

Post a Comment