சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

'ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேலானது!'- கலக்கும் விஜய் கட் அவுட்

மிழகமெங்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 
இதற்காக பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல் துறை, காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.  இந்நிலையில், திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள 'விஜய் ஹெல்மெட் விழிப்புணர்வு' குறித்த கட் அவுட் ஒரு நிமிடம் எல்லாரையும் நின்று பார்க்க வைத்துச் செல்கிறது.

ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பல்வேறு வகைகளில் பலரால் எடுத்துரைக்கப்பட்டாலும், அது பற்றிய கட்டாய சட்டம் வரும் போதுதான் அதனை பயன்படுத்த முனைகிறோம். அதில் ஏராளமான முரண்பாடான கருத்துகள் சமூகத்தில் நிலவினாலும், நன்மை பயக்கும் என்பதற்காகவே அது சட்டமாக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், திருவாரூர் பேருந்து நிலைய வாயிலில், சிவப்பு நிற பின் புலத்துடன் ஒரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள், ஹெல்மெட் குறித்த பயன்பாட்டு வாசகங்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.  இடையே, 'ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேலானது-விஜய்' என்ற வாசகத்துடன்,  'கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள்', என அச்சடிக்கப்பட்டிருந்தது.

இறுதியில், பொது நலன் கருதி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் என எழுதி இருந்தது.

திருவாரூர் பகுதி மக்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த கட் அவுட்.  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எப்போதும் அரசுத் துறைதான் அதிகபட்ச ஈடுபாடு காட்டும். அரசியல் கட்சியினர் கூட இதுபோன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டுவதில்லை. நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் போது விஷயங்களில் தலையிடுவது இல்லை. தன் இஷ்ட நடிகரின் புது திரைப்படம் வெளிவருவதற்கு ஆயிரக்கணக்கில் ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கும், தன் இஷ்ட நடிகரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் போர்டு வைப்பதுமே அவர்களின் வாடிக்கை.
ஆனால், இதுவரை இல்லாத வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்த, இந்த விஜய் மக்கள் இயக்க ப்ளக்ஸ் போர்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரியவர்கள் நின்று முழுவதும் படித்து விட்டு செல்கிறார்கள். ஹெல்மெட் கண்ணாடியை தூக்கி விட்டு இதனை படிப்பதற்காக வண்டியை நிறுத்துபவர்களையும் காண முடிகிறது. சில வாகன ஓட்டிகள், காவல் துறை அறிவிப்பில் விஜய் ஏன் வந்தார்? என குழம்பியும் செல்கின்றனர்.
ஒரு வகையில் எல்லாரின் கவனத்திற்கும் சென்று, அதன் மூலம் ஒருவர் ஹெல்மெட் அணிந்தால் கூட இதற்கு வெற்றிதான்



No comments:

Post a Comment