சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

கிரீஸ் பிரச்னை: இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு மிகவும் குறைவு!

ஒரு வாரத்துக்கும் மேலாக கிரீஸ் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது.  ஜூன் 30-ல்  ஐஎம்எஃப்க்கு செலுத்த வேண்டிய 1.8 பில்லியன் டாலர் கடனைச் செலுத்தவில்லை என்பதே உலகமெங்கும் பேசப்படும் செய்தியாக உள்ளது. இது குறித்து, இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், சென்னை ஆர்பிஐ தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியபோது, "கிரீஸ் பொருளாதார பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடியாக ஏற்படக் கூடிய பாதிப்புகள் மிக மிகக் குறைவாகும்.  அதே சமயம் மறைமுகமாக பாதிப்புகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக அந்நிய செலவாணியை அது பாதிக்கலாம்" என்றார்.

மேலும், "வங்கிகளின் வாராகடன் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து வங்கிகளுடன் ஆர்பிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் பிரச்னை என்ன என்பதை கண்டறிந்து சீக்கிரமாக அதை களைவோம்" எனவும் குறிப்பிட்டார். 

பணவீக்கம் குறித்தும், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் பேசிய அவர்," இந்தியாவில் பருவநிலை மற்றும் மழைப்பொழிவு ஆகியவை நன்றாக இருப்பதால், இந்திய பொருளாதார வளர்ச்சி காரணிகளும் நன்றாக இருப்பதாககவும், தற்போதைய நிலையில் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிமாற்றம் செய்வது ஐந்து மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இது நல்ல விஷயம். எந்தவொரு பண பரிமாற்றமாக இருந்தாலும் அதை நேரடியாக இல்லாமல், வங்கி கணக்கு மூலமாக செய்ய வேண்டியது மக்களின் கடமையாகும்" எனவும் அவர் தெரிவித்தார். 

தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், இது வரை நாங்கள் கொடுத்த உறுதிமொழி என்ன, அதில் எதை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மேற்க்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்கிற ரீதியில் பயணித்து வருகிறோம் எனவும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
No comments:

Post a Comment