சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

விஜய் சேதுபதியை ரீமேக் கவ்வும் !

'''ஒரு சின்ன விஷயம், அதை இப்பவே சொல்லலாமா... இல்லை படத்தோட ஓப்பனிங் ஷோ வரைக்கும் சஸ்பென்ஸா வெச்சுக்கலாமா?’னு பெரிய யோசனை. ஆனா, இப்பவே சொல்லிடலாம்னு முடிவுபண்ணிட்டேன். என் ரெண்டாவது படம் ஒரு ரீமேக். ஒரு ஃபாரின் படத்தை ரீமேக் பண்றேன். ஆனா, அது ஒரு தமிழ் சினிமாவுக்கான பக்கா சப்ஜெக்ட்'' - ஷூட்டிங் ஸ்பாட் களேபரங்களை மறந்துவிட்டுச் சிரிக்கிறார் 'சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமரசாமி. 
கறுப்புக் குதிரையாக ஜெயித்த 'சூது கவ்வும்’ ஹிட்டுக்குப் பிறகு, தன் இரண்டாவது படத்திலும் விஜய் சேதுபதியை இயக்குகிறார். சினிமா க்ரியேட்டர்களை ஆச்சர்யத்திலும், ரசிகர்களை சந்தோஷத்திலும் ஒருசேர ஆழ்த்திய 'சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு என்ன செய்வார் நலன் என்ற இரண்டு வருட எதிர்பார்ப்போடு களம் இறங்கியிருக்கிறார்.
''எந்த ஃபாரின் சினிமாவை ரீமேக் பண்றீங்க?''

''ஆங்... அதை மட்டும் டைட்டில் கார்டுல பார்த்துக்கங்களேன். படத்தோட பெயரைச் சொல்றதுல பல சங்கடங்கள் இருக்கு. மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களை ரீமேக் பண்ணா, எந்த விமர்சனமும் எழாது. ஆனா, வெளிநாட்டு சினிமாவை ரீமேக் பண்றோம்னு சொன்னா, எந்த மாதிரி பிரச்னை வரும்னு கணிக்கவே முடியலை.
முதல் சங்கடமா, அந்தப் படத்தை டௌன்லோடு பண்ணிப் பார்த்துட்டு, இப்பவே என் படத்துக்கு விமர்சனம் எழுத ஆரம்பிச்சுடுவாங்க. பல கற்பனைகளோடு என் படத்தைப் பார்க்க, யாரும் வர வேண்டாம். அதனால், அந்த சினிமா என்னன்னு டைட்டில் கார்டுல பார்த்துத் தெரிஞ்சுக்கங்க. இப்படி பல சிந்தனைகளாலதான் இன்னும் என் படத்துக்கு டைட்டிலே வெக்கலை. 'சூது கவ்வும்’ அளவுக்கு நச்னு ஒரு டைட்டில் பிடிக்கணும்!''
''படத்தோட அவுட்லைன் சொல்லலாம்ல?''
''ரொமான்டிக் காமெடி படம். ஹீரோ, ஹீரோயின் இருப்பாங்க. ஆனா, ரொமான்ஸ் இருக்காது. வாழ்க்கையை, அதன் போக்கில் எதிலும் பட்டுக்காம வாழும் ஹீரோ... ஐ.டி-யில் வேலை தேடிட்டு இருக்கும் ஹீரோயின். எந்த இடத்திலும் ஒட்டவே முடியாத இந்த ரெண்டு பேரும் ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அதான் சினிமா. காதலைத் தொந்தரவு செய்யாத காமெடியும், காமெடியைத் தொட்டு நகரும் காதலுமாகப் படம் இன்னொரு ஜானர்ல இருக்கும்.
விஜய் சேதுபதி கேரக்டர் பெயர் கதிரவன்.  ஹீரோயின் 'யாழினி’யா மடோனா செபாஸ்டியன் நடிக்கிறாங்க. மலையாளத்துல க்ளாசிக் ஹிட் அடிச்ச 'பிரேமம்’ பட ஹீரோயின். கதிரவன் - யாழினி, இவங்க ரெண்டு பேரோட இயல்பும் ஈர்ப்பும் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். சமுத்திரக்கனி சாரும் நச் ரோல் ஒண்ணு பண்ணியிருக்கார். என் செல்லம் சந்தோஷ் நாராயணன்தான் மியூசிக்!''
'' 'சூது கவ்வும்’ வெளிவந்து முழுசா ரெண்டு வருஷங்கள் ஆச்சு. இரண்டாவது படத்துக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?''
''குழப்பம்தான்! கதை, திரைக்கதைனு எதை ஃபிக்ஸ் பண்ணிக்கிறதுனு எல்லாத்திலும் குழப்பம். முதல் படத்துல தோத்திருந்தாக்கூட வருத்தம், கவலை எல்லாம் பட்டுட்டு, வெறியா வேலை செஞ்சிருக்கலாம். ஆனா, இந்த வெற்றி இருக்கே... அது யானையை கட்டிமேய்க்கிற மாதிரி. முதல்ல 'சூது கவ்வும்’ல இருந்து ஒரு லைன் பிடிச்சு அதன் தொடர்ச்சியா அடுத்தடுத்து ரெண்டு படங்கள் பண்ணலாம்னு முடிவுபண்ணி வேலை பார்த்தேன். ரெண்டாம் பாகத்துக்கு 'கை நீளம்’னு டைட்டில் எல்லாம் வெச்சு, ஸ்க்ரிப்ட் முடிச்சுட்டேன். கொஞ்சம் இடைவெளி விட்டு அதை வாசிச்சப்போ, சில இடங்கள்ல 'சூது கவ்வும்’ சாயல் இருந்தது. அதை அப்படியே தூக்கி ஓரமா வெச்சுட்டு, சில வருஷங்களுக்கு முன்னாடி நான் பார்த்த ஃபாரின் சினிமாவோட உரிமையை தயாரிப்பாளர் சி.வி.குமார் முறைப்படி வாங்கிக் கொடுக்க, நான் ஷூட்டிங் ஆரம்பிச்சு படத்தின் பெரும்பகுதியை முடிச்சுட்டேன். இந்தப் படத்துல 'சூது கவ்வும்’ சாயல் எங்கேயும் வரக் கூடாது. ஆனா, அதைவிட பெட்டர் சினிமாவா இருக்கணும்னு மட்டும் தீர்மானமா இருக்கேன்!''
''இரண்டாவது படத்திலும் ஏன் விஜய் சேதுபதி?''
'' 'சூது கவ்வும்’ படத்தை, நான் முதல்ல வடிவேலு சாரை மனசுல வெச்சுத்தான் எழுதினேன். அப்போ அவரை நெருங்கவே முடியலை. அப்புறம்தான் விஜய் சேதுபதிக்காக கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் பண்ணேன். ரெண்டாவது படம் எழுதும்போது என் மனசுல ரெண்டு பேர் இருந்தாங்க. ஒருவர் சசிகுமார்... இன்னொருவர் விஜய் சேதுபதி. உடனே, 'சசிகுமாருக்கு காமெடி செட் ஆகுமா?’னு யோசிப்பீங்கள்ல! அவருக்கு அது செட் ஆகாத மாதிரி இருக்கும்ல... அதுதான் காமெடியே. ஆனா, அவர் இந்தப் படத்துல நடிக்கலை. 'சூது கவ்வும்’ கேரக்டரைவிட இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு இன்னும் பொருத்தமா இருக்கும். அந்த அளவு தனக்குனு ஒரு ஸ்டைலை உருவாக்கிட்டார்!''
'' 'கதையே இல்லாம சும்மா ஒரு லைன் வெச்சுட்டு ஜாலியா ஒரு சினிமா பண்ணிட்டார்’னு ஒரு விமர்சனம் உங்க மேல உண்டு. அதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''விமர்சனம் எல்லாம் இல்லை... அதை ஒரு குற்றச்சாட்டாவே வெச்சாங்க. மொத்தப் படமும் போரடிக்காமல் போறதால கதையே இல்லாத மாதிரி தெரியலாம். 'ரெண்டு மணி நேர சினிமாவுக்கு, ஒரு சின்ன சிறுக¬தான் பெஸ்ட்’னு பாலுமகேந்திரா சார் சொல்லியிருக்கார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம், ஒரு சின்ன லைன்தான். ஆனா, படம் முழுக்க அவ்வளவு டீட்டெய்ல் பண்ணியிருப்பாங்க. முழுநீளக் கதையைவிட இந்த மாதிரி படங்கள் 100 மடங்கு அதிக உழைப்பு வாங்கும். அந்த உழைப்புக்குத்தான் அங்கீகாரம் கிடைக்குது. அதை 'கதையே இல்லாத சினிமா’னு ஒரு வரியில் தாண்டிப் போறது சரியில்லை!''
'' 'காக்கா முட்டை’ மணிகண்டனின் வெற்றியை எப்படிப் பார்க்கிறீங்க?''
''பிரமிப்பா இருக்கு! சின்ன பட்ஜெட்ல நல்ல சினிமா எடுத்தா, ஓரளவுக்கு ஓடும்; போட்ட காசு வந்துடும்னுதான் எல்லாரும் நினைச்சுட்டிருந்தோம். ஆனா, இப்படி அதிரிபுதிரி ஹிட் அடிக்கலாம்... பெரிய புரமோஷன்கூட தேவை இல்லைனு கண்ணு முன்னாடி பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கு.
தமிழ் சினிமா ரசிகர்களை நாமதான் ரொம்ப மட்டமா எடை போட்டுட்டோமோனு தோணுது. 'சகலகலா வல்லவன்’, 'பாயும்புலி’, 'கரகாட்டக்காரன்’ படங்களை ரசிக்கிறதுக்கு முன்னாடியே 'உதிரிப்பூக்கள்’, 'முள்ளும் மலரும்’, 'மூன்றாம் பிறை’ படங்களைக் கொண்டாடினவங்க. அப்படி பல தலைமுறைகளுக்கு முன்னாடியே தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் ரசனையை உச்சத்துக்குக் கொண்டுபோயிட்டாங்க. அதுக்கு நாம சரியான தீனி போடணும்னு 'காக்கா முட்டை’ வெற்றி உணர்த்தியிருக்கு. தமிழ் சினிமா ரசிகனின் உயரத்துக்கு நாம சினிமா எடுக்கணும்னு நண்பன் மணி ஒரு வாத்தியாரா மாறி பாடம் நடத்தியிருக்கார்!''
''குறும்படங்கள் மூலமா வந்த இயக்குநர்கள்  ஒரு குழுவாக சினிமாவில் இயங்கிட்டிருக்கீங்களா?''
''உப்பு தீர்ந்துட்டா, அவசரத்துக்கு பக்கத்து வீட்ல கேட்டு வாங்கிக்குவோம்ல. அப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிட்டு ஓடிட்டிருக்கோம். கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதைக்கு நானும், என் திரைக்கதைக்கு அவரும்னு மாறி மாறி வேலை பார்த்துட்டிருக்கோம்.
'சதுரங்க வேட்டை’ வினோத், 'மதுபானக்கடை’ கமலக்கண்ணன், 'சூது கவ்வும்’ லைன் எழுதின சீனிவாசன், நவீன்... இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்கவங்க பலத்தைப் பரஸ்பரம் பரிமாறிக்கிறோம். இப்படி ஒரு டீமே சேர்ந்து வேலை பார்ப்பதால், அடுத்தடுத்து புது முயற்சிகள் பண்ண முடியுது. ஆனா இப்போ, எல்லோருமே பரபரப்பாகிட்டோம்; உட்கார்ந்து பேசவே நேரம் இல்லை. நட்பு தொடர்ந்தாலும் ஆளுக்கு ஒரு திசையில் பறந்துட்டிருக்கோம்!''



No comments:

Post a Comment