சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

விம்பிள்டனில் குவிந்த சச்சின், கோலி குடும்பம்!

லகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. பல விளையாட்டு வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் காண ஆர்வம் காட்டுவார்கள். ரோஜர் ஃபெடரரின் தீவிர ரசிகரான சச்சின் தெண்டுல்கர் ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் போட்டியை காண லண்டன் செல்வது வழக்கம். தற்போது அந்த வரிசையில் இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியும் இணைந்துள்ளார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை. கோலி உள்பட சில முன்னணி வீரர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தென்ஆப்ரிக்காவில் உள்ள வனப்பகுதி ஒன்றில் விராட் கோலி அனுஷ்காவுடன் ஓய்வு எடுத்து வந்தார். இந் நிலையில் விம்பிள்டன் போட்டி தொடங்கியதும் விராட் கோலி - அனுஷ்கா ஜோடி தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளது. 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அவரது மனைவி அஞ்சலி விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் வரிசையாக அமரந்து நோவக் ஜோகோவிச்&  ரிச்சர்ரட் கேஸ்கெட் இடையேயான அரையிறுதி போட்டியை ரசிப்பது போன்ற புகைப்படத்தை ஆல் இங்கிலாந்து கிளப் ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதேபோல் ஆர்சனல் ஜாம்பவான் தியேரி ஹென்றியும் இதே போட்டியை காண வந்திருப்பதாக ஆல் இங்கிலாந்து கிளப் படத்தை வெளியிட்டுள்ளது.No comments:

Post a Comment