சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

ஒற்றைக் குழந்தை! உஷார் ரிப்போர்ட்

''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என அருணாச்சலம் மதுமதி தம்பதிக்கு விக்ரம் என்கிற ஒரே பையன். தன் மகன் மீது அருணாச்சலமும் மதுமதியும் அளவிடமுடியாத பாசம் வைத்திருந்தனர். பையனுக்கு 17 வயதாகும் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. பொறியியல் கல்லூரி ஒன்றில் பெருமளவு டொனேஷன் கொடுத்து விக்ரமைச் சேர்த்தார்கள். அதன் பின்னர் பெற்றோரிடம் பேசுவதையே விக்ரம் தவிர்த்தான். இரவில் நேரம் கழித்து வீட்டுக்கு வர ஆரம்பித்தான். 
சில நாட்கள் நண்பர்களுடனேயே வெளியிலேயே தங்க ஆரம்பித்தான். பெற்றோர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தால் பொருட்களை விட்டெறிவது, தன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்கில் வெளியே வராமல் இருப்பது என்று அவனது செய்கைகள் பெற்றோரை வாட்டின. என்னிடம் விக்ரமை அழைத்து வந்திருந்தனர். எடுத்த எடுப்பிலேயே அவன் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இரண்டு மூன்று அமர்வுகளுக்குப் பிறகே பேச ஆரம்பித்தான் விக்ரம்.

'என் அப்பாவும் அம்மாவும் சுயமாக என்னை எதுவுமே செய்ய விடுவதில்லை. சைக்கிள் ஓட்டினால்கூடக் கீழே விழுந்துவிடுவேன் என்று அதைக்கூடப் பழக அனுமதிக்கவில்லை. நான் என்ன புத்தகம் படிக்கவேண்டும் என்பதையும், என்ன சினிமா பார்க்க வேண்டும் என்பதையும்கூட அவர்களே தீர்மானித்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் 'சந்தோஷ் சுப்பிரமணியன்’னில் வரும் பிரகாஷ் ராஜ் மாதிரிதான் இரண்டு பேருமே நடந்து கொள்கிறார்கள்.
நான் நண்பர்களுடன் பேசினால்கூட 'கான்ஃபரன்ஸ்’ முறை மூலம் நாங்கள் பேசுவதை அம்மா கேட்பார். என் டயரியையும் படிப்பார்’ என்று தன் சங்கடங்களை எல்லாம் சொன்னான்.  உண்மையிலேயே அவனது பெற்றோருக்குத்தான் கவுன்சிலிங் தேவைப்பட்டது. அவர்களது குறை 'ஓவர் பொஸஸிவ்னெஸ்’. அதாவது ஒற்றைக் குழந்தை என்பதால் அதீதமாக அன்பும், ஆட்கொள்ளலும் இருந்ததுதான் தப்பாகப் போய்விட்டது. மூவருக்கும் உரிய அறிவுரைகளைத் தனித்தனியே கொடுத்தேன். இப்போது விக்ரம் நார்மலாகிவிட்டான்.''  - மன நல ஆலோசகர் வாசுகி சிதம்பரம் நம்மிடம் சொன்ன உண்மைச் சம்பவம் இது.
'ஒரு குழந்தையே போதும்’ என்ற மனநிலையில் பல இளம் பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இது நல்ல விஷயமா? இதற்கு என்ன காரணம்?
சமூகவியலாளர் பழ.சந்திரசேகரன், ''ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதே பெரிய விஷயம். இதில் எங்கே இரண்டு குழந்தை பெற்றுக்கொள்வது? பெற்றெடுத்து, நோய் நொடியில்லாமல் வளர்த்து, பள்ளியில் சேர்த்து, பணம் கட்டி எப்படி ஆளாக்குவது என்கிற மலைப்பே, 'ஒரு குழந்தையே போதும்’ என்ற மனநிலைக்குப் பல தம்பதிகளைத் தள்ளிவிடுகிறது.  
தங்களின் அலுவலக ரீதியான வளர்ச்சிக்கு இரண்டாவது பிரசவம் பெரிய தடையாக இருக்கும் என சில பெண்கள் நினைக்கிறார்கள். பெரிய வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். வருடா வருடம் சுற்றுலாச் செல்ல வேண்டும். வசதியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்... என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். இரண்டு குழந்தைகள் இருந்தால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் 'ஒன்றே போதும்’ என் அவர்கள் வருகிறார்கள்.'' என்கிறார் தெளிவாக.
ஒற்றைக் குழந்தைகளின் மனோநிலை பற்றி மன நல ஆலோசகர் வாசுகி சிதம்பரம் இப்படி விவரிக்கிறார்:
''ஒரே குழந்தை என்பதால் பெற்றோர் மிக அதிகமாகப் பாசத்தைப் பொழிவார்கள். அது சில சமயம் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவது உண்டு. குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, மிக அதிகமாகச் செல்லம் கொடுப்பது போன்றவை குழந்தைக்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிடும். கேட்டவை கிடைக்காதபோது மன அழுத்தம் உண்டாகும். பிடிவாதம் அதிகமாகும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மையப் புள்ளியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பெற்றோர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதால் பிறரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்கும் இயல்பு வரலாம்.
குழுவாகச் செயல்பட வேண்டிய தருணங்களில் ஒற்றைக் குழந்தைகளின் செயல்பாடு சற்றே சுயநலம் மிக்கதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குணாதிசயங்களை 'ஒன் சைல்ட் சிண்ட்ரோம்’ (ளிஸீமீ சிலீவீறீபீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ) என்போம்.
சகோதரன் அல்லது சகோதரியுடன் இருக்கும் குழந்தைக்கு அவர்களே உண்மையான நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். தங்களது சுக துக்கங்களை உடனடியாகப் பகிர்ந்துகொள்ள நம்பகமான - பாசத்துக்கு உரிய தோழனாகவும் தோழியாகவும் அவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் தொடங்கி உணவு, பெற்றோரின் அன்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர பாசம் என்பது ஓர் உன்னதமான உணர்வு. ஒற்றைக் குழந்தைகளுக்கு அது கிட்டாமலேயே போய்விடுகிறது. அதே சமயம் இதற்கு மாறான கருத்துக்களையும் வேறு சிலர் முன் வைக்கிறார்கள்.
பெற்றோரின் பாசத்தைப் பங்கு போடாமல் முழுமையாகத் அனுபவிக்கும் வாய்ப்பு ஒற்றைக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. உணவு, உடை, விளையாட்டுப் பொருட்கள் எனக்  கேட்டதெல்லாம் கிடைக்கிறது. பெற்றோரின் தனிப்பட்ட கவனம் முழுமையும் கிடைப்பதால், அவர்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆரோக்கியமான சத்துணவு கிடைப்பதால் ஒற்றையர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவு இல்லை. பல குழந்தைகளுக்கும் பொருளாதார வசதியைப் பங்கிட்டுத் தரவேண்டிய நிலை ஒற்றையரின் பெற்றோருக்கு இல்லை. எனவே, படிப்புக்கும் அப்பால், நடனம், இசை, ஓவியம், நீச்சல், கராத்தே எனப் பலவற்றையும் கற்பதற்கான நிதியை ஒற்றையர்களின் பெற்றோரால் தாராளமாக ஒதுக்கீடு செய்ய முடிகிறது. தலைமைப் பண்பு மிக்கவர்களாக ஒற்றையர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஒற்றைக் குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் துணையுடனே இருப்பதால், அவர்களின் செயல்பாடுகளில் கூடுதல் முதிர்ச்சி இருக்கும். பிறர் துணையின்றித் தனியே வெளிப்படுத்தக்கூடிய ஓவியம், எழுத்தாற்றல் போன்ற திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆக ஒற்றைக் குழந்தையாக இருந்தால் பல சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு!'' என்கிறார் வாசுகி சிதம்பரம்.

''ஒற்றைக் குழந்தைகளுக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா?'
ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையின் பொது மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருமான ஈ.தண்டபாணி சொல்கிறார்.
'''செல்லம் கொடுக்கிறேன்’ பேர்வழி என்று பெற்றோர் கூடுதல் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக அளிப்பதனாலும், உடன் ஓடி விளையாட அண்ணன், தம்பி, அக்கா, தங்கை... என்று யாரும் இல்லாமல் டி.வி.யே கதி என்று கிடப்பதாலும்  ஒற்றையர்கள் மிக அதிக எடைகொண்டவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெற்றோரும் அலுவலகத்தில் இருக்க, பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாத நிலையில், ஒற்றைக் குழந்தைகளுக்கு ஒரு வித மன இறுக்கம் ஏற்படக் கூடும். அதைத் தணிக்க ஓயாமல் சாப்பிடும் இயல்பு வந்து எந்நேரமும்  எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படலாம். விளைவு... உடல்பருமன்!' என கூடுதல் பருமன் ஆகும் பாதிப்பைச் சொல்கிறார் தண்டபாணி.
ஒற்றைக் குழந்தைப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? வாசுகி சிதம்பரம் இப்படியரு வழி சொல்கிறார்.
''ஒற்றையரின் பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற வீட்டுப் பிள்ளைகளுடன் சகஜமாகக் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். சம வயதுடைய மற்ற பிள்ளைகளை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உபசரிக்குமாறு பழக்கலாம். இதன் மூலம் ஒற்றைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சுலபமாக தீர்க்க முடியும்!''
ஒற்றைக் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பயம்கொள்ள வேண்டியதில்லை. காரணம், மகாத்மா காந்தி அடிகள், அமெரிக்க அதிபராக இருந்த ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரபல ஓவியர் லியர்னாடோ டா வின்ஸி, பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி, விஞ்ஞானி ஐசக் நியூட்டன் போன்றவர்கள் ஒற்றையர்களே!  
 கு.கவுக்குப் பின் குழந்தை!
ஒரு குழந்தையோடு கு.க. செய்த பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாமே என்கிற எண்ணம் உருவானால், அதற்கு என்ன செய்வது?
கோவை மாநகராட்சி ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர் கே.எஸ்.மகேஸ்வரி இதற்கு நம்பிக்கை வார்க்கிறார்.
''ட்யூபக்டமி எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சையை செய்துகொண்ட பெண்ணுக்கு ரீகேனலைசேஷன் (Recanalisation) என்னும் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும். இதில் 70 முதல் 90 % மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கான வாசக்டமி என்னும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையை செய்துகொண்ட பிறகு மீண்டும் குழந்தை பெற விரும்பினால் 'வாசக்டமி ரிவர்சல்’(vasectomy reversal)  என்னும் அறுவைசிகிச்சையை மேற்கொள்ளலாம்.



No comments:

Post a Comment