சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Jul 2015

ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!

சென்னையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் 10.35 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இதனிடயே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில், பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது. 

இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் நடுவே சரியாக 10.45 மணிக்கு ஒரே தண்டவாளத்தில் வந்தது. இதனை பார்த்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தினர். இந்த தகவலை அறிந்த  ரயில்களில் இருந்த பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால்  ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில்களில் இறங்கி நடந்தே சென்றனர்.

தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஒரு ரயிலை வேறு தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.No comments:

Post a Comment