சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Jul 2015

நெருங்கிய நண்பரை இப்படிப் பார்க்க வேண்டியதாகிவிட்டதே...!'- கண்ணீர் வடித்த விஜயகாந்த்

விஜயகாந்தின் திரைப்படப்பயணம் தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவருடைய நெருங்கிய நண்பராக திகழ்ந்த இப்ராகிம் ராவுத்தர், அவருடைய பலம் என்று சொல்லப்படும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார். அத்துடன் விஜயகாந்தை வைத்து நிறைய வெற்றி படங்களையும் தயாரித்திருக்கிறார்.விஜயகாந்தின் திருமணத்துக்குப் பிறகு அவர்களுக்கிடையே நெருக்கம் குறைந்து, ஒரு கட்டத்தில் பிரிவாகவே மாறிவிட்டது. இருவரும் பேசிக்கொள்வதுகூட இல்லை என்றாகிவிட்டது. இப்போது இப்ராகிம் ராவுத்தர் உடல்நலக்குறைவால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரை மருத்துவமனைக்கு வந்து விஜயகாந்த் சந்தித்திருக்கிறார். சில நிமிடங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்தவர், உடன் வந்தவர்களிடம் அவரைப் பற்றிச் சொல்லி கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம். நெருங்கிய நண்பரை நீண்ட நாட்கள் கழித்து இப்படிப் பார்க்க வேண்டியதாகிவிட்டதென்பதே அவருடைய கண்ணீருக்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

சமீபத்தில்தான் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த போது தமக்கு மிகவும் நட்பாக இருந்த சிலரை விஜயகாந்த் அழைத்து, அவர்களுடன் விருந்து உண்டார் என்று சொல்லப்பட்டது. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்திருந்த நேரத்தில், இன்னொரு நெருங்கிய நண்பருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறதென்கிறார்கள்.  No comments:

Post a Comment