சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

எம்.எல்.ஏ அருண்பாண்டியனை காணவில்லையாம்!

'நடிகர் அருண்பாண்டியன் எம்.எல்.ஏவை காணவில்லை... அவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூபாய் பத்தாயிரம் பரிசு ' என முகநூலில் மீம்ஸ் படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந் தேடுக்கப்பட்டவர் நடிகர் அருண்பாண்டியன். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தேமுதிக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

பின்னர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனக் கசப்பில் அதிமுகவுக்கு ஆதரவாக சென்றவர்களில் அருண்பாண்டியனும் ஒருவர். இந்நிலையில்  பதவியேற்ற இந்த நான்கு வருடங்களில் ஒரு சில தடவைகள் மட்டுமே தொகுதி பக்கம் வந்த இவரை, அதன்பின் பார்க்கவே முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் தொகுதி மக்கள்.

என்னதான் நடக்கிறது என்று தொகுதி மக்களிடம் விசாரித்தோம், வேதனையுடன் பேச ஆரம்பித்தனர்...

"இந்த தொகுதி அதிமுக மற்றும் தேமுதிகவுக்கும் சாதகமானது என்றாலும் விஜயகாந்த்  இந்த தொகுதியை கேட்டதால்,  தொகுதிப்பங்கீட்டின்போது தேமுதிகவிற்கு கொடுத்தார்கள். தேமுதிகவில் நிர்வாகிகள் பலர் இருந்தும், தனது நெருங்கிய நண்பரான அருண்பாண்டியனை இங்கு நிற்க வைத்தார் விஜயகாந்த். 

அப்போதே தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அவரும் ஓட்டு கேட்கும் நேரத்தில் இங்கு வீடு எடுத்து தங்கி, 'நான் இனிமேல் இங்குதான் இருப்பேன்.. உங்கள் வீட்டு பிள்ளை' எனக் கூறி வாக்கு சேகரித்தார். எங்க மக்களும் ஒட்டு போட்டு வெற்றியும் பெற வைத்தனர். எல்லாம் கொஞ்சகாலம் வரைக்கும்தான்.. அதற்கு அப்புறம் அவரை தொகுதி பக்கம் ஆளையே பார்க்க முடிய வில்லை. அவர் பதவியேற்றதிலிருந்து மொத்தமா சுமார் ஏழு தடவைதான் வந்திருப்பார். எம்.எல்.ஏ இல்லாமல் எங்க பகுதி மக்கள் அவஸ்தைபட்டு வருகிறோம்" என்றனர். 

மேலும் பேசிய அவர்கள், “ஆரம்பத்தில் அலுவலகத்தில் மனு வாங்க அவரது ஆட்களை வைத்திருந்தார். அவர்களிடம் மனு கொடுத்தாலும் எந்த பலனும் இருக்காது. பின்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக எம். எல்.ஏ அலுவலகம் மூடியே கிடக்கும். எப்போதாவது தொகுதிக்கு வந்து போட்டாவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார். இதனால் எங்க தொகுதியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

அதனால் கோபமடைந்த யாரோ ஒரு தொகுதிவாசிதான் ஃபேஸ் புக் பக்கத்தில் 'மோஸ்ட் வான்டட்' என எழுதி காணவில்லை என்று போட்டுள்ளனர்" என்றனர்.

இந்நிலையில் தம்மை பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதை அறிந்த அருண்பாண்டியன், கடந்த  7 ஆம் தேதி  பேராவூரணிக்கு வந்து  +2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு கொடுத்து விட்டு, கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவதாக கூறி விட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் புறப் பட்ட காமடியும் நடந்தது” என்கின்றனர்.

ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றாதீர்கள்.. வரும் காலங்களில் எங்கும் நிற்க முடியாது!                             No comments:

Post a Comment