சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Jul 2015

ஆஃப் கிளட்ச் ஆபத்து!

பைக்குக்கு மிக முக்கியமான பாகம் கிளட்ச். இது சரிவர இயங்கவில்லை என்றால், பைக்கை ஒழுங்காக ஓட்ட முடியாது. கியர் மாற்றுவது மிக மிக நேர்த்தியான வேலை. ஒரு சின்ன தவறு நடந்தாலும் பர்ஃபாமென்ஸ், மைலேஜ் ஆகியவை குறைந்துவிடும். அதுமட்டுமல்ல, இன்ஜின் அதிக சூடேறி பெரிய அளவில் செலவு வைத்துவிடும். பலர் பைக் ஓட்டும்போது கிளட்ச்சில் கை வைத்தபடியே ஓட்டுவார்கள். இது தவறு. இப்படி ஆஃப் கிளட்ச்சில் ஓட்டும் பழக்கம் உடையவர்களின் பைக் அடிக்கடி பழுதாகி செலவு வைக்கும். கிளட்ச்சில் என்னென்ன பாகங்கள் இருக்கின்றன. இதை எப்படி சர்வீஸ் செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் பைக்கை சமதளத்தில் நிறுத்தி, இன்ஜின் ஆயிலை முறைப்படி வடியவிட வேண்டும். இதன்பின் படிப்படியாக படத்தில் காட்டியுள்ளபடி செய்ய வேண்டும்.
01கிளட்ச் கேஸில் இருக்கும் ஸ்க்ரூக்களை சரியாகப் பொருந்தக்கூடிய உபகரணம் கொண்டு அகற்றவும். ஸ்க்ரூவின் மேற்பகுதி சிலிப் ஆகிவிடாமல் கவனமாக அகற்ற வேண்டும். ஸ்க்ரூவை அகற்ற கடினமாக இருக்கும் பட்சத்தில் 'இம்பாக்ட் டிரைவர்' கொண்டு முயற்சிக்கவும்.
02 கிளட்ச் ஹவுஸிங்கைக் கவனமாகத் தனியாக எடுத்து, அதிலுள்ள பாகங்களைப் பாதுகாப்பாக வைக்கவும். கிளட்ச் கேஸ் கேஸ்கட்டைப் பொறுமையாக வெளியே எடுக்க வேண்டும். கேஸ்கட்டின் பாகம் ஒட்டிக் கொண்டால், கனம் குறைவான கத்தியை வைத்து கேஸில் கீறல் விழாமல் சுரண்டி எடுக்க வேண்டும்.
03 கிளட்ச் ஸ்பிரிங் போல்ட்டுகளை 'டி ப்ளேயர்' கொண்டு எதிரெதிர் திசையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, போல்ட்டுகளை அகற்ற வேண்டும்.
04 கிளட்ச் அவுட்டர் கவர் அசெம்பிளியை அகற்றுங்கள்.
05கிளட்ச் ஸ்டீல் மற்றும் கார்க் பிளேட்டுகளை எந்த ஆர்டரில் அகற்றுகிறோமோ, அதே ஆர்டரில்தான் திரும்பவும் பொருத்த வேண்டும். எனவே. கவனமாக இதைப் பார்த்து அகற்றுங்கள்.
06 கிளட்ச் புஷ் ராடை எடுத்துவிட்டு, இன்னர் கிளட்ச் பெல்லை லாக் செய்து அதில் இருக்கும் நட்டை அகற்றவும். அப்போது அந்த நட்டில் லாக் வாஷர் அல்லது காட்டர் பின் இருக்கும். அதை எடுத்த பிறகு நட்டைக் கழற்றிவிட்டு, கிளட்ச் இன்னர் பெல்லை வெளியே எடுக்கவும்.
07 அவுட்டர் பெல்லைக் கவனமாக அகற்றவும்.
08 அவுட்டர் அசெம்பிளியை படத்தில் காட்டியிருப்பது போல கிளட்ச் பிளேட்டுகள் பொருந்திய இடம் சமமாகத் தேய்ந்து இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதிகமாகத் தேய்ந்திருந்தாலும், சமமில்லாமல் இருந்தாலும் கிளட்ச் சிலிப் ஆகும். எனவே, இதை மாற்றிவிட வேண்டும். போல்ட் அமரும் பகுதியில் கீறல் இருந்தால் மாற்றிவிட வேண்டும்.
09 கிளட்ச் ஃபைபர் பிளேட்டுகளின் தேய்மானத்தை வெர்னியர் ஸ்கேல் கொண்டு அளக்கவும். குறிப்பிட்ட இலக்கைவிட அதிகமாகத் தேய்ந்திருந்தாலும், பிளேட்டுகள் வளைந்திருந்தாலும் மாற்றிவிட வேண்டும். அதிகமாக இயங்கியதால் ஃபைபர் பிளேட்டின் வண்ணம் மாறியிருந்தாலும் மாற்ற வேண்டும்.
10 கிளட்ச் ஸ்டீல் பிளேட்டுகளுக்கும் மேலே கூறிய அனைத்தும் பொருந்தும்.

11இன்னர் பெல்லில் தேய்மானம் கீறல்கள் ஏதாவது இருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், இன்னர் பெல்லை மெயின் சாஃப்ட்டில் பொருத்தி அதிக அசைவு (ஷேக்) இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். அதிகமாக இடைவெளி இருந்தால் மாற்றிவிட வேண்டும்.
12 கிளட்ச் அவுட்டர் பெல்லை எதிரெதிர் திசையில் சுழற்றி, இடைவெளி அதிகம் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். அதிகம் இருந்தால் மாற்றவும். கிளட்ச் பிளேட்டுகள் பொருத்தும் விளிம்புப் பகுதி சீராக இருக்க வேண்டும். அதில் தேய்மானம் இருந்தால் மாற்றிவிடவும். அப்படி இதை மாற்றும்போது, கிராங்க் ஷாஃப்ட்டில் இருக்கும் பிரைமரி டிரைவ் கியரையும் மாற்ற வேண்டும்.
கிளட்ச்சில் ஆயில் இல்லாமல், நீர் கலந்து - அதிக சுமையுடன், வரம்புக்கு மீறிய வேகத்தில் இயங்கி இருந்தால் கிளட்ச் அசெம்பிளியில் உள்ள பெரும்பாலான பொருட்கள் தீய்ந்து போனது போல இருக்கும். இதுபோன்ற சமயங்களில் மொத்த அசெம்பிளியை மாற்றிவிடுவது நல்லது!


No comments:

Post a Comment